ரூ.16 லட்சம் கோடியை காலி செய்த கொரோனா.. வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய காரணிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கண்ட பலத்த சரிவின் காரணமாக மூன்று மாதங்களில் இல்லாதளவு சரிவினைக் கண்டது. நவம்பர் 26 உடன் முடிவடைந்த வாரத்தில் இன்டென்ஸ் 4% சரிவினைக் கண்டது.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்ததையடுத்து, வரலாற்று உச்சத்தில் இருந்து 8% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் 16 லட்சம் கோடி இழப்பினை சந்தித்துள்ளனர்.

மீண்டும் உயர ஆரம்பித்துள்ள தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்கள் சொல்வதென்ன? மீண்டும் உயர ஆரம்பித்துள்ள தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்கள் சொல்வதென்ன?

அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு விரைவில் வட்டியில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்திலும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

சர்வதேச சந்தையில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலத்த வீழ்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பல ஐரோப்பிய நாடுகளில் கொரொனாவின் தாக்கம் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தான் சப்ளையை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மீண்டும் விலையை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, தங்களது எண்ணெய் இருப்பினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள் நிலவரம்
 

அன்னிய முதலீடுகள் நிலவரம்

கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டு விகிதமானது 21,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வெளியேறியுள்ளது. கடந்த அக்டோபரில் 25,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட நிலையில், நவம்பரில் மொத்தத்தில் 31,000 கோடி ரூபாய்க்கு மேல் வெளியேறியுள்ளது. இதே 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கியிருந்தனர். இதே நவம்பர் மாதத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

வாகனங்கள் விற்பனை

வாகனங்கள் விற்பனை

நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை குறித்தான தரவுகள் சந்தையில், வரும் வாரத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிப் பற்றாக்குறை காரணமாக பயணிகள் வாகன விற்பனையானது சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இரு சக்கர வாகன மற்றும் வணிக வாகனங்கள் விற்பனையானது விற்பனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹென்ஸ் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

Array

Array

சுரங்கத் தொழிலுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், டிசம்பர் 1 அன்று அதன் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதே டிசம்பர் 3 அன்று பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 619.22 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது. இந்த பொது பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையாக 443 - 453 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோ பேஷன் நிறுவனம் நவம்பர் 30, அன்று அதன் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடவுள்ளது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் டிசம்பர் 30 அன்று பங்கு வெளியீடு செய்யவுள்ளது. இது டிசம்பர் 2 அன்று முடிவடையவுள்ளது. 870 - 900 ரூபாயாக பங்கு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

பொருளாதார தரவு

பொருளாதார தரவு

ஜூலை - செப்டம்பர் மாதம் குறித்தான ஜிடிபி விகிதமானது நவம்பர் 30 அன்று வெளியிடப்படவுள்ளது. இது 7.5 - 9% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உற்பத்தி மற்றும் நிதி பற்றாக்குறை குறித்தான தரவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 1 அன்று பிஎம்ஐ குறியீடானது வெளியாகவுள்ளது. இது தவிர வங்கி டெபாசிட் மற்றும் கடன் வளர்ச்சி விகிதமானது வெளியாகவுள்ளது.

டெக்னிக்கல் திட்டம்

டெக்னிக்கல் திட்டம்

நிஃப்டி 50ல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மிகப்பெரிய பியரிஷ் கேண்டில் பார்ம் ஆகியுள்ளது. இது 3% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த வாரத்தில் 4% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதமாக 17,200 - 17,000 புள்ளிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

அமெரிக்காவின் வீடு விற்பனை குறித்தான தரவு, ஃபெடரல் வங்கி தலைவர் பேச்சு, புதன்கிழமையன்று அமெரிக்காவின் பிஎம்ஐ விகிதம், வியாழக்கிழமையன்று மொத்த வாகன விற்பனை, விவசாயம் அல்லாத பே ரோல்ஸ், வேலையின்மை விகிதம், தொழிற்சாலை ஆர்டர்கள் வெளியாகவுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona empties Rs 16 lakh crore.. Top 10 factors to look out for next week

Corona empties Rs 16 lakh crore.. Top 10 factors to look out for next week/16 லட்சம் கோடியை காலி செய்த கொரோனா.. வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய காரணிகள்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X