1 வருடத்தில் 290% லாபம்.. டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை என்றாலே அது சூதாட்டம் என்று கூறி வந்த காலம் போய், இன்று பலரும் லாபம் சம்பாதிக்கும் ஒரு முதலீட்டு தளமாக மாறியுள்ளது.

 

பொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்தாலே நஷ்டம் தான் என்ற கருத்துகள் பரவலாக நிலவி வருகின்றன. ஆனால் சரியான படி கண்கானித்து லாபம் சம்பாதிப்பவர்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

பங்கு சந்தையின் நெளிவு சுளிவுகளை அறிந்து கொண்டு, தெளிவாக அதில் முதலீடு செய்யும் பட்சத்தில், நிச்சயம் லாபம் ஈட்ட முடியும். ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்த நிறுவனத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, அதன் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் முதலீடு செய்வதே இதற்கு சிறந்த வழியாக இருக்கும்.

ஐடி துறை சார்ந்த நிறுவனம்

ஐடி துறை சார்ந்த நிறுவனம்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐடி நிறுவனமான டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் பற்றி தான். ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஒரு ஆண்டாகவே அபரிதமான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இன்னும் சில காலாண்டுகளுக்கு இந்த வளர்ச்சி நீடிக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது. எப்படி இருப்பினும் இந்த நிறுவனம் எந்த மாதிரியான ஒப்பந்தங்களை செய்துள்ளது என்ற முழுமையான விவரங்கள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

இந்த நிறுவனம் கடந்த 12 மாதங்களில் மட்டும் 290% லாபம் கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 22, 2020ல் 48.20 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, தற்போது 188 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது கிட்டதட்ட 290% ஏற்றமாகும். இந்த காலக்கட்டத்தில் சென்செக்ஸ் கூட 51% தான் ஏற்றம் கண்டுள்ளது.

பலே லாபத்தில் முதலீடு
 

பலே லாபத்தில் முதலீடு

உதாரணத்திற்கு இந்த நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 49 ரூபாய் என்ற விலையில் பங்குகளை வாங்கியிருந்தால், சுமார் 2000 பங்குகளை வாங்கியிருக்கலாம். இன்றைய மதிப்பு 188 ரூபாய் என கொண்டாலும், ஒரு பங்குக்கு 139 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். உங்களது முதலீடு 2,78000 ரூபாயாக பெருகியிருக்கும்.

இந்த ஆண்டில் எவ்வளவு ஏற்றம்

இந்த ஆண்டில் எவ்வளவு ஏற்றம்

இந்த பங்கின் விலையானது கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 90% ஏற்றம் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 57.4% ஏற்றத்தில் காணப்படுகிறது. மேலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த பங்கின் விலையானது மூவிங் ஆவரேஜ் 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாட்களுக்கு மேலாக காணப்படுகிறது.

கடன் இல்லா நிறுவனம்

கடன் இல்லா நிறுவனம்

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிறுவனம் கடன் இல்லா ஒரு வெற்றிகரமான நிறுவனமாகும். இது பிபிஎம் மற்றும் ஏஐ வணிகத்தில் கவனம் செலுத்த, அதன் துணை நிறுவனமான சிக்னெக்ஸின் பங்குகளை விற்பனை செய்துள்ளது. அதோடு சமீபத்தில் சில கையகப்படுத்தல்களையும் செய்துள்ளது.

லாபம் எவ்வளவு?

லாபம் எவ்வளவு?

டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கடந்த மார்ச் காலாண்டில் 28.66 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 11.55 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல கடந்த நிதியாண்டில் 79.75 கோடி ரூபாய் லாபத்தினையும். முந்தைய நிதியாண்டில் 63.74 கோடி ரூபாய் லாபத்திலும் இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Datamatics Global Services around 290% returns in just one year, do you have this stock?

Share market latest updates.. Datamatics Global Services around 290% returns in just one year, do you have this stock?
Story first published: Monday, June 21, 2021, 20:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X