உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தியது. ஆனாலும் எரிபொருள் விலை உயர்வால் தொடர்ந்து விலைவாசி அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாகப் புதன்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் தற்போது துவங்கியுள்ள நிலையில் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருகிறது.

டாவ் ஜோன்ஸ்
புதன் கிழமை வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ் குறியீடு சற்றும் எதிர்பார்க்காத வகையில் 2.54 சதவீதம் கிட்டதட்ட 835 புள்ளிகளைக் காலை வர்த்தகத்திலேயே இழந்துள்ளது. டாவ் ஜோன்ஸ் குறியீட்டின் 51 வார குறைவான அளவு 31,228.22 புள்ளிகள் தற்போது 31,824.18 புள்ளிகளாக உள்ளது.

நாஸ்டாக் குறியீடு
இதேபோல் நாஸ்டாக் குறியீடு டாவ் ஜோன்ஸ்-ஐ போலவே புதன்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் மூலம் நாஸ்டார் குறியீடு 3.79 சதவீதம் கிட்டதட்ட 455 புள்ளிகளை இழந்துள்ளது. நாஸ்டாக் குறியீட்டின் 51 வார குறைவான அளவு 11,108.76 புள்ளிகள் தற்போது 11,532.44 புள்ளிகளாக உள்ளது.

எஸ் அண்ட் பி குறியீடு
மேலும் எஸ் அண்ட் பி குறியீடு 3.03 சதவீதம் சரிந்து 3,964.44 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் இன்று காலை வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் இருக்கும் 11 முக்கிய நிறுவனமும் சரிவை தழுவியுள்ளது.

Target Corp பங்குகள்
அமெரிக்காவின் Target Corp இன் பங்குகள் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் லாபம் பாதியாகக் குறைந்த நிலையில் இந்நிறுவன பங்குகள் 25.1% சரிந்து S&P 500 குறியீட்டின் இன் அடிமட்டத்திற்குச் சென்றது. Target Corp இன் லாபம் அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் சரக்குச் செலவுகள் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரீடைல் நிறுவனங்கள்
வால்மார்ட், கேப், Kohl's Corp, Nordstrom Inc, காஸ்ட்கோ, Best Buy, Macy's Inc மற்றும் Dollar General Corp போன்ற பிற சில்லறை விற்பனையாளர்களின் பங்குகள் 4.1% முதல் 11.8% வரையில் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை
இதன் வாயிலாக வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொள்ளும் என்பது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது.

தங்கம், பிட்காயின்
அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவால் கடந்த 3 மணிநேரத்தில் தங்கம் விலை 1814 டாலரில் இருந்து 1824 டாலர் வரையில் உயர்ந்து மீண்டும் 1820 டாலருக்கு சரிந்து. இதேவேளையில் பிட்காயின் மதிப்பி 3.10 சதவீத சரிவில் 29,109.51 டாலராகச் சரிந்துள்ளது.