ஜோ பிடன் வெற்றி.. இந்தியப் பங்குச்சந்தை நிலை என்ன..? முதலீடு செய்யலாமா..? வேண்டமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் விறுவிறுப்பான தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 77 வயதான ஜோ பிடன் டொனால்டு டிரம்ப்-ஐ தோற்கடித்து அமெரிக்காவின் 46வது அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் சர்வதேச சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜோ பிடன் வெற்றிபெற்று அமெரிக்க முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

அவரது வெற்றி அமெரிக்கா சந்தைக்கு மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகச் சந்தைக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்புக்கு பை பை சொன்ன ஜோ பிடன்.. இந்தியாவுக்கு மீண்டும் GSP தகுதி கிடைக்குமா..?

ஜோ பிடன் வெற்றி

ஜோ பிடன் வெற்றி

இதுநாள் வரையில் பொருளாதார வளர்ச்சியில் தாறுமாறான வளர்ச்சியைக் கண்டு வந்த சீனா மீது முதலீட்டாளர்கள் கவனம் இருந்த நிலையில், ஜோ பிடன் வெற்றிக்குப் பின் மொத்த ஈர்ப்பும் இந்தியா பக்கம் திரும்பும் எனக் கேஆர் சோக்சி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவன் சோக்சி தெரிவித்துள்ளார்.

கறுப்பினத்தவர்கள் வாக்குகள்

கறுப்பினத்தவர்கள் வாக்குகள்

2020 அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிகளவில் கருப்பு மற்றும் பிற நாட்டுக் குடியுரிமை மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளார். டிரம்ப் மீதான வெறுப்பு அனைத்தும் இந்தத் தேர்தலில் வாக்குகளாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளியாக இந்தியா மட்டுமே இருக்க முடியும். ஜோ பிடனுக்கு வேறு வாய்ப்புகள் கிடையாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார் டேவன் சோக்சி.

2020ல் அமெரிக்கா- இந்தியா
 

2020ல் அமெரிக்கா- இந்தியா

பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராகப் பதவியேற்கும் முன் ஜோ பிடன் அமெரிக்காவின் வெளியுறவும் பிரிவின் செனேட்டராக இருந்தார். 2006ல் அதாவது துணை அதிபராகப் பதவியேற்க 3 வருடங்களுக்கு முன்பு ஜோ பிடன், '2020ல் உலகிலேயே மிகவும் நெருங்கிய நண்பர்கள் நாடாக அமெரிக்காவும் - இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவு' எனக் கூறியவர் பிடன்.

அமெரிக்க முதலீட்டாளர்கள்

அமெரிக்க முதலீட்டாளர்கள்

இதனால் இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் அதிகளவிலான அமெரிக்க முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் பல முன்னணி முதலீட்டு மற்றும் டெக் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இந்திய பங்குச்சந்தைகள்

அமெரிக்கா மற்றும் இந்திய பங்குச்சந்தைகள்

ஜோ பிடன் முன்னிலை வகித்த துவங்கியது முதல் அமெரிக்கச் சந்தையும் இந்தியச் சந்தையும் அதிகளவிலான வளர்ச்சி அடைந்து துவங்கியது. இதேவேளையில் சீன பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து முதலீட்டைச் சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜோ பிடன் முடிவு என்ன..?

ஜோ பிடன் முடிவு என்ன..?

அமெரிக்கா - இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் ஜோ பிடன் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தப் பத்திர முதலீட்டு மற்றும் வட்டி விகிதத்தை அதிகரித்தால் இந்திய சந்தைக்கு ஆபத்து ஏற்படும்.

இதேவேளையில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அமெரிக்காவை மிரட்டி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளைக் குறைக்கவும், நாட்டின் வர்த்தகச் சந்தையை மேம்படுத்துவதே முக்கியப் பணியாக ஜோ பிடனுக்கு இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரம்

தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பார்க்கும் போது அரசு பத்திய முதலீட்டை அதிகரிக்கவோ, கார்பரேட் வட்டியை அதிகரிக்கவோ, பெடரல் வங்கி வட்டியை அதிகரிக்கவோ வேண்டியது இல்லை. ஆனால் வலிமைப்படுத்தும் நோக்கில் ஜோ பிடன் செய்தால் இந்திய சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.

சரி அமெரிக்கா பொருளாதாரத்தின் நிலை என்ன..?

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமெரிக்கப் பொருளாதாரம் செப்டம்பர் மாதத்தில் 17 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் கணித்து இருந்த நிலையில் கணிப்புகளையும் உடைத்து டொனால்டு டிரம்ப் ஆட்சியில் சுமார் 33 சதவீத பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு

வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு

இதேபோல் பெடரல் ரிசர்வ் மற்றும் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அந்நாட்டு வேலைவாய்ப்பின்மை அளவீடு 16 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் வேலைவாய்ப்பின்மை வெறும் 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை

புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்தச் சிறப்பான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மையில் ஏற்பட்ட சரிவு வெறும் 6 மாத காலத்தில் சுமார் 1.5 கோடி அமெரிக்கர்களை நேரடியாக நன்மை அளித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை.

பெரு நகரங்களிலிருந்து நகர்வு

பெரு நகரங்களிலிருந்து நகர்வு

இதோடு அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மக்கள் பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்குச் சொந்த வீடு வாங்கி இடம்பெயரத் துவங்கி உள்ளனர். இதனால் சிறு நகரங்களில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பான நிலையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

கொரோனா காலம்

கொரோனா காலம்

கொரோனா பாதிப்பு நிறைந்த காலகட்டத்தில் பொதுச் சேவைத் துறையிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு முதலீடு அதிகளவில் இருந்த அதேநேரத்தில் தனியார் துறையில் முதலீடு அளவு கடந்த 8 வருடத்தில் இல்லாத வகையில் கோடைக்கால அளவீட்டில் இருந்து சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது அமெரிக்காவின் ஸ்திரமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Effects of Joe biden winning in indian stock market

Effects of Joe biden winning in Indian stock market
Story first published: Sunday, November 8, 2020, 17:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X