லட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. ஒரே வருடத்தில் 346% லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை என்றாலே பயந்து ஒதுங்கும் காலம் போய் இன்று பலரும் துணிந்து முதலீடுகளை செய்து வருகின்றனர். லாபமும் பார்க்கின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டில் 346% கொடுத்த ஒரு பங்கினைத் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

 

ஆல்கஹால் நிறுவனமான குளோபஸ் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம். இது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 346% ஏற்றம் கண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது ஜூன் 18, 2020 அன்று வெறும் 130.7 ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 1, 2021ல் 584 ரூபாயாக அதிகரித்துள்ளது.

லட்சாதிபதி தான்

லட்சாதிபதி தான்

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தான் இதன் பங்கு விலையானது 346% ஏற்றம் கண்டுள்ளது. இதே கால கட்டத்தில் சென்செக்ஸ் வெறும் 53% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் சுமார் 750 பங்குகள் வாங்கியிருக்கலாம். அதன் இன்றைய மதிப்பு 3.39 லட்சம் ரூபாயாகும்.

ஏற்றத்தில் பங்கு விலை

ஏற்றத்தில் பங்கு விலை

இந்த பங்கின் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டு, 81% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று 5.2% அதிகரித்து 559 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 531.30 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இலக்கு இது தான்
 

அடுத்த இலக்கு இது தான்

இதனையடுத்து இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மூவிங் ஆவரேஜுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில தான் இந்த பங்கின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்களும் கணித்து வருகின்றனர். இந்த பங்கின் அடுத்த இலக்கு 685 ரூபாய் என்றும் கணித்துள்ளனர்.

பட்டையை கிளப்பிய விற்பனை

பட்டையை கிளப்பிய விற்பனை

இந்த நிறுவனத்தின் லாப மதிப்பு கடந்த மார்ச் காலாண்டில் 161.02% அதிகரித்து 50.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 19.40 கோடி ரூபாயாக கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் விற்பனை கடந்த காலாண்டில் 356.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தூள் கிளப்பி வரும் பங்கு விலை

தூள் கிளப்பி வரும் பங்கு விலை

கடந்த சில மாதங்களாக மீண்டும் வந்து கொண்டு இருக்கும் தேவைக்கு மத்தியில், இந்த பங்கின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இதன் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த பங்கின் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Globus spirits gave 346% returns in one year: some other stocks gave 1000% since mar 2020

Share market latest updates.. Globus spirits gave 346% returns in one year: some other stocks gave 1000% since mar 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X