தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு ஏற்ப தங்க நகை வாங்க இது சரியான நேரம் தான். இன்று காலை தொடக்கத்திலேயே சர்வதேச சந்தை தொடங்கி இந்திய சந்தைகள் வரையில் தங்கம் விலை சரிய தொடங்கியுள்ளது.

நிபுணர்கள் சொல்வதனைப் போல், அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்பு வரை, தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. முந்தைய அமர்வில் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலையானது முடிவில் சற்று சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு? இன்று இன்னும் விலை குறையுமா? என்ன காரணங்கள்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இரண்டு தினங்களுக்கு பின்பு தங்கம் விலையானது, இன்று மீண்டும் சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட இரண்டு டாலர்கள் குறைந்து, 1910.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்று 1911.90 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1907.60 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதே நேற்றைய உச்சம் 1913.80 டாலர்களாகும். ஆக இன்று விலை குறைய சற்று வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தை வெள்ளியும் சற்று சரிவு

சர்வதேச சந்தை வெள்ளியும் சற்று சரிவு

தங்கம் விலையினைப் போலவே, வெள்ளி விலையும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது நேற்று சற்று ஏற்றத்தில் இருந்த நிலையில் முடிவில் 54.570 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று காலை தொடக்கத்தில் 24.400 டாலர்களாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது 0.39% குறைந்து 24.477 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவினைக் காணலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை நிலவரம்
 

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 39 ரூபாய் குறைந்து, 50,924 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கலாம் என்று கோடக் செக்யூரிட்டீஸ் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆக இது தங்கம் வாங்க நல்ல சான்ஸ் தான்.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்திருந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது கிலோவுக்கு 215 ரூபாய் குறைந்து, 62,066 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவில் 62,281 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 62,060 ரூபாயாக தொடங்கியுள்ளது.

இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்

இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்

இன்னும் சில வாரங்களில் பண்டிகை காலம் தொடங்கவிருக்கும் நிலையில், தங்க நகைக்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்க நகை வாங்க ஏற்ற நேரம் தான். அதனால் தொடர்ந்து விலை குறைந்து வருவது, நகை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது எனலாம்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் அமெரிக்க தேர்தல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்னும் சில தினங்களுக்கு ஏற்ற இறக்கம் காணப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அமெரிக்காவில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? ஊக்கத் தொகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கம் காணப்படும். எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுவதால் இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகின்றது.

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம்

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம்

தங்கமானது பணவீக்கம், பொருளாதார சரிவு உள்ளிட்ட நோக்கங்களுக்காக சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இதனால் இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதை மறுபதற்கில்லை. ஏனெனில் உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதோடு தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட பரவலானது ஆரம்பித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆக இது இன்னும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

மீடியம் டெர்மில் காமெக்ஸ் தங்கத்தின் சப்போர்ட் லெவல் - 1,880 - 1840, ரெசிஸ்டன்ஸ் லெவல் 1940 - 1975 டாலர்களாக இருக்கும். எனினும் நீண்டகால நோக்கில் அவுன்ஸூக்கு 2,500 டாலர்களாக நீண்டகால இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது 52,200 - 54,000 ரூபாயாகவும். நீண்டகால நோக்கில் 65,000 - 67,000 ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் மணிக் கண்ட்ரோல் கணிப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று மாற்றம் காணாத நிலையில், நேற்று கிராமுக்கு 4.756 ரூபாயாகவும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 68,048 ரூபாயாகவும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம் என்று கூறி வரும் நிலையில், ஆபரண தங்கமும் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த ஐந்து தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையானது இன்று மாற்றாம் காணாத நிலையில், நேற்று கிராமுக்கு 5,188 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்து, 41,504 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. ஆபரண தங்கத்தின் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்திருந்தாலும், தூய தங்கம் விலையானது ஒரு நாள் அதிகரித்தால், மறு நாள் வீழ்ச்சி கண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

ஆபரண வெள்ளியின் விலை

ஆபரண வெள்ளியின் விலை

ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இன்று விலையானது இன்னும் மாற்றம் காணாத நிலையில், நேற்று கிராமுக்கு 62.10 ரூபாயாகவும், கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து 62,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையும் நீண்டகால நோக்கில் தேவை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சரிவினைக் காணலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels
பைவோட் பாயிண்ட் - 50,926
சப்போர்ட் லெவல்கள் - 50,786, 50,516, 50,108
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,148, 51,336, 51,746

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 50,910
சப்போர்ட் லெவல்கள் - 50,366, 49,893, 48,876
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,383, 51,927, 52,944

வெள்ளி இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels
பைவோட் பாயிண்ட் - 62,123
சப்போர்ட் லெவல்கள் - 61,667, 61,053, 59,983
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,737, 63,193,64,263

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 62,565
சப்போர்ட் லெவல்கள் - 61,060, 59,672, 56,779
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 63,953, 64,458, 68,351

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold and silver prices starts to trade little fall

Gold and silver prices starts to trade little fall today. But it expects longer term upside being capped around $2500 per ounce.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X