அதிரடி காட்டிய Happiest Minds Technologies பங்குகள்! முதல் பந்திலேயே சிக்ஸர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச் சந்தை. புரிந்து கொண்டவர்களுக்கு, கொட்டிக் கொடுக்கும் புதையல். விவரம் தெரியாமல் காலை விடுபவர்களுக்கு கசப்பான அனுபவங்களைக் கொடுக்கும் கணக்கு வாத்தியார்.

 

தொடர்ந்து பங்குச் சந்தை பற்றிப் படிப்பது, கம்பெனி விவகாரங்களைப் பின் தொடர்வது, சந்தை செண்டிமெண்டை புரிந்து கொள்வது, பொருளாதார விவகாரங்களை தெரிந்து கொள்வது, முதலீட்டாளரா டிரேடரா என்பதை புரிந்து வியாபாரம் செய்வது, இதை எல்லாம் விட கொஞ்சம் அதிர்ஷ்டம்... என எல்லாம் சேர்ந்தால் தான் பங்குச் சந்தையில் வெற்றியாளராக முடியும்.

ஒரு சில பங்குகளில் முதலீடு செய்து கொஞ்ச காலத்துக்கு பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இன்னும் சில பங்குகளில், முதலீடு செய்து சில வருடங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலை ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகும். திடீரென ஒரு கட்டத்தில் நல்ல விலை ஏற்றம் காணும்.

எடுத்த எடுப்பிலேயே சிக்ஸர்

எடுத்த எடுப்பிலேயே சிக்ஸர்

ஆனால் ஒரு சில பங்குகள் மட்டும் தான், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போதே நல்ல விலை ஏற்றத்துடன் பட்டியலிடப்படும். அப்படித் தான் Happiest Minds Technologies ஐபிஓ, பட்டியலிடப்பட்டு சிறப்பாக விலை அதிகரித்து இருக்கிறது. சுருக்கமாக முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இருக்கிறது Happiest Minds Technologies. இந்த பங்கின் ஐபிஓ விலை முதல் பட்டியலிடப்பட்ட விலை விவரங்கள் வரை எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.

ஐபிஓ வெளியீடு

ஐபிஓ வெளியீடு

Happiest Minds Technologies கம்பெனி, ஒரு பங்கின் விலை 165 - 166 ரூபாய்க்கு, கடந்த செப் 07 முதல் 09-ம் தேதி வரை ஐபிஓ வெளியானது. இந்த பங்கு வெளியீடு மூலம் 702 கோடி ரூபாயைத் திரட்டுவது தான் கம்பெனியின் திட்டம். இந்த பங்குகளை 150.98 மடங்கு கூடுதலாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டதாக லைவ் மிண்ட் செய்திகள் சொல்கின்றன.

அதிரடி லிஸ்டிங்
 

அதிரடி லிஸ்டிங்

Happiest Minds Technologies பங்கு, இன்று பங்குச் சந்தையில் 350 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இது பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 110 சதவிகிதம் விலை அதிகம். மேலும் இன்று வர்த்தக நேரத்தில் 394 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. ஆக பங்கு வெளியீட்டு விலையான 166 ரூபாயில் இருந்து, இன்றைய உச்ச விலையான 394 ரூபயைக் கணக்கிட்டால் 137 % விலை அதிகரித்து இருக்கிறது.

லாபம் பார்த்து இருக்கலாம்

லாபம் பார்த்து இருக்கலாம்

ஆக இந்த Happiest Minds Technologies பங்கு வெளியீட்டில் பங்கெடுத்தவர்கள், இன்றே உச்ச விலையில் பங்குகளை விற்று இருந்தால் 137 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். Happiest Minds Technologies பங்கு, இன்றைய வர்த்தக நேர முடிவில் கூட லிஸ்டிங் விலையான 350 ரூபாயை விட 20 ரூபாய் அதிகமாக, 370 ரூபாய்க்கு தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Happiest Minds Technologies listed and surged up to 137% over issue price

The Happiest Minds Technologies company listed and surged up to Rs 390 that is 137% gain over issue price of Rs 166.
Story first published: Thursday, September 17, 2020, 18:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X