கடந்த சில வர்த்தக தினங்களாக பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வந்த இந்திய பங்கு சந்தைகள் , இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், தொடக்கத்தில் சென்செக்ஸ் 148.91 புள்ளிகளாக ஏற்றம் கண்டு, 44,766.95 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 47.50 புள்ளிகள் அதிகரித்து, 13,161 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதற்கிடையில் 969 பங்குகள் ஏற்றத்திலும், 226 பங்குகள் குறைந்தும், 44 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், பிஎஸ்இ டெக் குறியீடு தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, எஸ்பிஐ, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல். ஒஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் மாருதி சுசூகி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல். ஒஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அதெல்லாம் சரி மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டு வருகின்றதே என்ன காரணம்? தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் உச்சத்தினை தொட்டு வருகின்றது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 139 புள்ளிகள் அதிகரித்து, 44757.54 ஆகவும், இதே நிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்து, 13,158 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் நிபுணர்கள் நிஃப்டி 13150 லெவலை தாண்டிவிட்டால், அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 13,250 - 13300 ஆகும். ஆக 12950 - 13000 என்ற லெவல் வந்தால், சந்தையில் வாங்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆக சந்தையின் போக்கினை பார்த்து வாங்கலாமா? வேண்டாமா என முடிவு செய்யுங்க