111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 30, 2019 அன்று தான் ஐபிஓ வெளியிடத் தொடங்கியது. ஐ ஆர் சி டி சி நிறுவனத்தின் ஐபிஓ வெளியாகி அக்டோபர் 03, 2019 உடன் நிறைவு அடைந்து விட்டது. இந்த ஐ ஆர் சி டி சி நிறுவன பங்குகளைக் கேட்டு சுமார் 111 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்திருக்கிறதாம். அதாவது 111 மடங்கு அதிகம் சப்ஸ்கிரைப் செய்து இருக்கிறார்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள். அதிலும் குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் அதிகம் இந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார்களாம்.

 

இந்த ஐபிஓ வழியாக, மத்திய அரசு வைத்திருக்கும் 100 சதவிகித ஐ ஆர் சி டி சி நிறுவனத்தின் பங்குகளில், 12.6 சதவிகித பங்குகளை வெளியிட்டார்கள். இந்த 12.6 சதவிகித பங்குகள் என்பது சுமார் 2 கோடி பங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஓவில் இந்த பங்குகளை சுமார் 315 - 320 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. ஐ ஆர் சி டி சி நிறுவன பங்குகளை ஐபிஓ வழியாக வாங்க நினைத்தவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 40 பங்குகளையாவது வாங்க வேண்டி இருந்தது. அதற்கு அதிகபட்சம் 12,800 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..!

வரும் அக்டோபர் 09, 2019, புதன் கிழமை தான் பங்குகளை ஒதுக்கீடு செய்யப் போகிறார்களாம். வரும் 14 அக்டோபர் 2019, திங்கட்கிழமை தான் பங்குகளை மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ மற்றும் தேசிய பங்குச் சந்தையான என் எஸ் இ-யிலும் பட்டியல் இடப் போகிறார்களாம்.

45 லட்சம் கோடி டாலரை ஆட்டை போட்ட பிரிட்டீஷ்காரர்கள்..! ஜெய்சங்கர் பேச்சு..!

எப்படி 111 மடங்கு கூடுதலாக விண்ணப்பித்து இருக்கிறார்கள் எனக் காரணங்களைப் பார்த்தால், 2018 - 19-ல் சுமார் 280 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்து இருப்பது, தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவது, மேற்கொண்டு முதலீடு சார் செலவுகளைச் செய்ய சுமார் 1,100 கோடி ரூபாய் பணம் இருப்பது என பல அம்சங்களைப் பட்டியல் போட முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC ipo subscribed 111 times more

IRCTC ipo share are over subscribed. The retail investors has subscribed more in this government company ipo.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X