எல்ஐசி பங்கு வெளியீட்டு விலையில் இருந்து பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக பட்டியலிடும் போதே சரிவில் தான் பட்டியலிடப்பட்டது.
ஆரம்பத்தி பங்கினை 949 ரூபாய்க்கு நிறுவனம் வெளியிட்டு இருந்த நிலையில், முதல் நாளே தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது.
இதற்கிடையில் தொடர்ந்து பட்டியலிடப்பட்டத்தில் இருந்தே சரிவினையே கண்டு வருகின்றது.
விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரோ.. 55 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

இன்று என்ன நிலவரம்?
இன்று என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.75% சரிவினைக் கண்டு, 826.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் உச்ச விலை 856.80 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 825 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 825 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.72% சரிவினைக் கண்டு, 826.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் உச்ச விலை 856.95 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 825.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 825.05 ரூபாயாகும்.

4 அமர்வுகளில் எவ்வளவு சரிவு?
இதற்கிடையில் இப்பங்கின் விலையானது கடந்த 4 அமர்வுகளில், ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் சந்தை மதிப்பு, ஐபிஓ மதிப்பில் இருந்து 77,600 கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
எல்ஐசி யின் சந்தை மதிப்பானது இன்றைய பங்கு முடிவின் அடிப்படையில் பார்க்கும்போது அதன் சந்தை மதிப்பானது 77,639.06 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டு, 5,22,602.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஐபிஓ-ல் எவ்வளவு மூலதனம்?
ஐபிஓ-ல் இந்த பங்கின் விலையானது 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் சந்தை மூலதனம் 6,00,242 கோடி ரூபாயாக இருந்தது. பங்கு சந்தையில் இப்பங்கானது லார்ஜ் கேப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஏ குரூப்-னை சேர்ந்த பங்காக உள்ளது.

தொடக்கத்தில் இருந்து எவ்வளவு சரிவு?
சந்தையில் தொடர்ந்து செல்லிங் அழுத்தம் இருந்து வரும் நிலையில், இப்பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் கடந்த அமர்வின் முடிவு விலையில் இருந்து இப்பங்கின் விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே இதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் மதிப்பு
சந்தை மதிப்பின் அடிப்படையில் 5வது இடத்தில் தற்போது எல்ஐசி இந்தியா நிறுவனம் உள்ளது. முன்னதாக இந்த இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் இருந்தது. இதன் சந்தை மூலதனம் 5,46,397.45 கோடி ரூபாயாக உள்ளது. எப்படியிருப்பினும் எல்ஐசி, எஸ் பி ஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச் டி எஃப் சி லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ புருடென்ஷியல் உள்ளிட்ட நிருவனங்களை காட்டிலும் மேலாக உள்ளது.

இன்றைய சந்தை நிலவரம்?
இன்று சென்செக்ஸ் 1534.16 புள்ளிகள் அல்லது 2.91 சதவீதம் அதிகரித்து, 54,326.39 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 456.75 புள்ளிகள் அலது 2.89 சதவீதம் அதிகரித்து, 16,266.15 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.