1900 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து கடந்த வாரத்தில் 4 அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலும் சரிவிலேயே காணப்படுகின்றது.

 

முன்னதாக 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ், இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகின்றது.

அடேங்கப்பா.. 3 மாதத்தில் 20,540 கோடி ரூபாய் லாபம்.. அசத்தும் ரிலையன்ஸ்..!

இது நடப்பு வாரத்தில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் தொடர்ந்து சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது...

1900 புள்ளிகளுக்கு மேல் சரிவு

1900 புள்ளிகளுக்கு மேல் சரிவு

குறிப்பாக 2.17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1954 புள்ளிகள் அல்லது 3.31% வீழ்ச்சி கண்டு 57,082.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 492.80 புள்ளிகள் அல்லது 3.3% சரிவினைக் கண்டு, 17022.75 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ கன்சியூமன்ஸ் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட இன்டெக்ஸ்கள் அதிகபட்சமாக 5% சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி பிஎஸ்இ, சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்எம் சிஜி, நிஃப்டி ஆட்டோ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு
 

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஓஎன் ஜி சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால் கோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

2.46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1918.54 புள்ளிகள் அல்லது 3.25% குறைந்து, 57,118.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 576.5 புள்ளிகள் அல்லது 3.27% குறைந்து, 17040.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

market crash! sensex crashes 1900 points, nifty slips below 17150

market crash! sensex crashes 1900 points, nifty slips below 17150/1900 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X