அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த 4 மாதங்களாகப் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம், வட்டி விகிதம் உயர்வு ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான சரிவையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது.
மாத சம்பளகாரர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் சம்பள உயர்வு அமோகம்.. 5 வருட உச்சத்தை எட்டலாம்..!
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவின் மூலம் ஏப்ரல் 2020க்கு பின்பு நாஸ்டாக் காம்போசிட் குறியீடு மீண்டும் டெத் கிராஸ் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாஸ்டாக் காம்போசிட்
நாஸ்டாக் காம்போசிட் குறியீடு நவம்பர் 19ஆம் தேதி உச்சத்திற்குப் பின்பு வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட 1.2 சதவீதம் வரையிலான சரிவின் மூலம் மொத்தமாக 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

டெத் கிராஸ்
டெத் கிராஸ் என்பது சில முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு சந்தை போக்கை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முறை, தற்போது நாஸ்டாக் காம்போசிட் குறியீடு வெள்ளிக்கிழமை சரிவுடன் மீண்டும் மோசமான டெத் கிராஸ் நிலையை அடைந்துள்ளது எனப் பொருளாதார வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.

2000, 2008, 2020
இந்த டெத் கிராஸ் நிலை கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலமான 2020 ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது, இதற்கு முன் ஐடி மற்றும் டெக் துறையில் உருவான டாட் காம் பபுள் வெடித்த ஜூன் 2000லும், லெமேன் பிரதர்ஸ் திவாலான போது சர்வதேச சந்தையில் உருவான கடுமையான நிதி நெருக்கடிக் காலமான ஜனவரி 2008ல் உருவானது, தற்போது மீண்டும் உருவாகியுள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்கள்
இந்த டெத் கிராஸ் மூலம் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கட்டாயம் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்பது இல்லை, ஆனால் கட்டாயம் சரிவு பாதை தொடரும் என்பது உறுதி. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.