சிறு முதலீட்டளார்களுக்கு சூப்பர் ஆஃபர்.. நய்கா நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு வெளியீடு (IPO) என்றாலே, சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள்.

 

ஏனெனில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை கூட, குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக ஒரு நிறுவனத்தின் பங்கினை குறைந்த விலையில் வாங்க ஐபிஓ ஒரு சிறந்த ஆப்சன் எனலாம்.

பொதுப்பங்கு வெளியீடு என்றால் என்ன? இதில் எப்படி பங்கேற்கலாம். பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள், முதல் முறையாக வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. இதனை தரகு நிறுவனங்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நய்கா நிறுவனம் பற்றித் தான்.

2022க்குள் 5 நாடுகள் பிட்காயினை அரசு நாணயமாக ஏற்கும்.. சந்தை வல்லுனர்கள் கணிப்பு..!

மிக நல்ல வாய்ப்பு

மிக நல்ல வாய்ப்பு

பங்கு சந்தையில் நிறுவனங்கள் ஆரம்பத்தில் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள். ஆக மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை ஆரம்ப காலத்திலேயே வாங்குவது நல்ல விஷயம். ஏனெனில் எதிர்காலத்தில் அவைகள் நல்ல லாபம் கொடுக்கலாம். அந்த வகையில் நய்கா நிறுவனத்தின் பங்கினை வாங்க இது நல்ல வாய்ப்பு எனலாம்.

நல்ல எதிர்காலம் உண்டு

நல்ல எதிர்காலம் உண்டு

குறிப்பாக தற்போது ஈ-காமர்ஸ் வணிகங்கள் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், நய்கா நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளில் அழகு சாதன பொருட்களுக்கான சந்தையானது பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவில் அந்தளவுக்கு வளர்ச்சி காணவில்லை எனலாம். ஆக வரும் காலத்தில் நய்கா நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

ஐபிஓ எப்போது
 

ஐபிஓ எப்போது

இந்த நிலையில் தான் நய்கா நிறுவனம் அக்டோபர் 28ம் தேதி பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது மீண்டும் நவம்பர் 1ம் தேதி முடிவடையவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்கு வெளியீட்டிற்கு இப்போதிருந்தே தயாராகலாம்.

விலை நிலவரம் என்ன?

விலை நிலவரம் என்ன?

நய்கா நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டு விலை 1,085 - 1,125 ரூபாயாக நிர்ணயம், செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் 630 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வெளியீட்டினை செய்யவுள்ளது. மேலும் தற்போதுள்ள புரோமோட்டர்கள் மற்றும் பங்குதாரர்களின் 4.19 கோடி பங்குகளும் இந்த பங்கு வெளியீட்டில் விற்பனை செய்யப்படவுள்ளது.

யார் நிறுவனர்?

யார் நிறுவனர்?

ஃபல்குனி நாயனா, சஞ்சய் நாயர், ஃபல்குனி நாயனார் குடும்ப அறக்கட்டளை மற்றும் சஞ்சய் நாயர் குடும்ப அறக்கட்டளை ஆகியவை இந்த நிறுவனத்தின் புரோமோட்டார்கள் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 2012ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு 2015ல் இருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்பப்பட்டு வந்தது.

எதற்காக ஐபிஓ

எதற்காக ஐபிஓ

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது அதன் சில்லறை வர்த்தகத்தினை மேம்படுத்தவும், சில்லறை வர்த்தகத்தினை விரிவாக்கவும் செய்யவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் சிறு பகுதி கடனையும் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கடனை செலுத்துவதன் மூலம், வட்டி விகிதம் குறையும், இதன் மூலம் லாபம் அதிகரிக்க முடியும் என நய்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

லாபம் விகிதம்

லாபம் விகிதம்

முந்தைய நிதியாண்டில் 16 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்ட இந்த நிறுவனம், கடந்த 2021ம் நிதியாண்டில் 61.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 2,441 கோடி ரூபாயாக இருந்தது, இது முந்தைய ஆண்டில் 1,768 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

ஆன்லைன் வாடிக்கையாளர்கள்

ஆன்லைன் வாடிக்கையாளர்கள்

நய்காவின் மொபைல் அப்ளிகேஷனை கடந்த மார்ச் 2021 நிலவரப்படி 43.7 மில்லியன் சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். நய்காவின் மொத்த ஆன்லைன் விற்பனையில் 86.7% விற்பனையானது மொபைல் ஆப் மூலமாக வந்தது என்பது கவனிக்கதக்கது. இன்னும் எதிர்காலத்தில் ஆன்லைன் வணிகம் என்பது மேன்மையடையும் என்பதால், இது நல்ல வாய்ப்பு எனலாம்.

பங்கு சந்தையில் பட்டியல் எப்போது?

பங்கு சந்தையில் பட்டியல் எப்போது?

நவம்பர் 1 முடிவடையவுள்ள பங்கு வெளியீட்டுக்கு மத்தியில், நவம்பர் 11 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்டப் நிறுவனங்களில் முன்னதாக சோமேட்டோ நிறுவனம் பங்கு வெளியீட்டினை பிரம்மாண்டமாக செய்த நிலையில், இதுவும் நல்ல வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதகமான காரணிகள் என்ன?

சாதகமான காரணிகள் என்ன?

இந்த நிறுவனத்தில் நல்ல முன்னணி பிராண்டுகள், குறிப்பாக உள்நாட்டு முன்னணி பிராண்டுகள், வெளிநாட்டு பிராண்டுகள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் பேஷன், காஸ்மெடிக்ஸ், நேச்சுரல் புராடக்ஸ் உள்ளிட்ட பல பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக நய்கா பெயரில் சொந்தமான உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது. இது தவிர வாடிக்கையாளார்களை கவரும் விதமாக பலவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

மக்களுக்கு விருப்பமான பொருட்கள்

மக்களுக்கு விருப்பமான பொருட்கள்

மேலும் மொத்த வாடிக்கையாளர்களில் 70% பேர் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப நய்கா பொருட்களை வாங்குவதாகவும், 30% பேர் புதிய வாடிக்கையாளர்கள் எனவும் தரவுகள் கூறுகின்றன. இதில் பல ஆயிரம் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக மக்களுக்கு விருப்பமான பல பிராண்டுகளையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்பது நன்றாக உள்ளது எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nykaa IPO opens for subscription on October 28, 2021: check other details

Popular online beauty aggregator Nykaa’s IPO opens for subscription on October 28, 2021: check other details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X