இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும், தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவினைக் கண்டு முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன.
இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து அன்னிய நிறுவன முதலீடுகளும் வெளியேற தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதலீடுகள் வரத்து?
என் எஸ் இ தரவுகளின் படி, ஜனவரி 19 அன்று தொடர்ச்சியான மூன்றாவது அமர்வாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 2704.77 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 195.07 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக 116.89 புள்ளிகள் அதிகரித்து, 60,215.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 174.60 புள்ளிகள் அதிகரித்து, 17,938.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 133.10 புள்ளிகள் குறைந்து, 59,965.72 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.60 புள்ளிகள் அதிகரித்து, 17,908.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1326 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி பேங்க், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா கன்சியூமர் புராடக்ஸ், பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், ஓ என் ஜி சி, டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
தற்போது 10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 307.44 புள்ளிகள் குறைந்து, 59,791.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.2 புள்ளிகள் குறைந்து, 17,862.20 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து சரிவினை கண்டு வரும் நிலையில் 60,000 புள்ளிகளுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.