இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்படுகின்றன.
இது அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீடுகள் மீண்டும் வெளியேறத் தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் லாபத்தினை புராபிட் புக்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது மேற்கொண்டு அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தால், இது இன்னும் டாலருக்கு சாதகமாக அமையலாம். இது அமெரிக்க பங்கு சந்தை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் இந்திய பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
ஆரம்பமே குழப்பம்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி..!

முதலீடுகள் வரத்து?
என் எஸ் இ தரவுகளின் படி, ஜனவரி 18 அன்று தொடர்ச்சியான இரண்டாவது அமர்வாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,254.95 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 220.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை ஆசிய சந்தைகள் பலவும் தொடக்கத்தில் சரிவிலேயே இருந்தன. இதற்கிடையில் இந்திய சந்தையும் தொடக்கத்திலேயே சரிவில் காணப்பட்டது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு புராபிட் புக்கிங் ஒரு காரணமாக இருந்தாலும், பரவி வரும் ஓமிக்ரானால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. மேலும் பணவீகத்தினை ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.

தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக75.22 புள்ளிகள் அதிகரித்து, 60,830.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 63.70 புள்ளிகள் அதிகரித்து, 18,176.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 287.31 புள்ளிகள் அதிகரித்து, 60,467.55 புள்ளிகளாகவும், நிஃப்டி 83.20 புள்ளிகள் அதிகரித்து, 18,029 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 952 பங்குகள் ஏற்றத்திலும், 1166 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, பஜாஜ் பின்செர்வ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், ஹெச் சி எல் டெக், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
தற்போது 10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 335.1 புள்ளிகள் குறைந்து, 60,419.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 87.3 புள்ளிகள் குறைந்து, 18,025.75 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து சரிவினை கண்டு வரும் நிலையில் 61,000 புள்ளிகளுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.