நிபுணர்கள் சொன்னதைபோல் மீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 52,400 மேல் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 

கடந்த அமர்வில் புராபிட் புக்கிங் காரணமாக சந்தை சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நிபுணர்கள், சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் வாங்கலாம். சந்தை சரியும் எந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் சந்தை மீண்டும் புதிய உச்சத்தினை தொடும் என்றும் கூறியிருந்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக சந்தையானது முந்தைய அமர்வில் சரிந்தாலும், இன்று மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று கேப் ஆகி தொடங்கியுள்ளது. அதோடு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசிகளும் மிக வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது சந்தைகு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. அதோடு ஜிடிபி குறித்தான வளர்ச்சி மதிப்பீட்டினையும் அதிகரித்துள்ளது. ஆக இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதுவும் சந்தைக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்
 

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 152.78 புள்ளிகள் அதிகரித்து, 52,458.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38.20 புள்ளிகள் அதிகரித்து, 15,725.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், சிப்லா, யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74 - 74.50 ரூபாயாக இன்று இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 172.91 புள்ளிகள் அதிகரித்து, 52,478.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.45 புள்ளிகள் அதிகரித்து, 15,730.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

opening bell: Sensex trade above 52,400, nifty trade nearly 15,750

Market update.. Opening bell: Sensex trade above 52,400, nifty trade nearly 15,750
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X