5 வருடத்தில் 2400% வளர்ச்சி.. ராகவ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தனிநபர் பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெரிதும் கேள்விப்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 

அப்படி இந்த நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல், ஏன் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இப்படியொரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்..?

வாங்க பார்த்திடுவோம்..

 ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் ஒவ்வொரு முதலீடுகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் இவர் சோமேட்டோ மற்றும் இதர முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு குறித்துத் தனக்கு இத்தகைய நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் இல்லை எனக் கூறிய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

 புதிய டெக் கம்பெனி

புதிய டெக் கம்பெனி

இதுகுறித்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், புதிய டெக் கம்பெனிகள் மற்றும் அதன் ஐபிஓ மீது எனக்கு விருப்பம் இல்லை. இதைவிடவும் மெட்டல் மற்றும் உள்நாட்டு வங்கி பங்குகளில் அதிகளவிலான லாபமும் வாய்ப்புகளும் இருப்பதாக அறிவித்தார்.

 சோமேட்டோ ஐபிஓ
 

சோமேட்டோ ஐபிஓ

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் இந்தக் கருத்துக்குப் பின்பும் சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. கடந்த 10 நாள் வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 147.80 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 0.54 சதவீதம் சரிந்து 138.95 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 மெட்டல் துறை

மெட்டல் துறை

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறியது போலவே மெட்டல் துறையில் யாரும் பெரிதும் கேள்விப்படாத ஒரு நிறுவனத்தில் சுமார் 31 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராகியுள்ளார். இந்தச் செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

 30.9 கோடி ரூபாய் முதலீடு

30.9 கோடி ரூபாய் முதலீடு

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா Raghav Productivity Enhancers என்ற நிறுவனத்தில் சுமார் 6,00,000 பாதுகாப்பற்ற சிசிடி-களைத் தலா 515 ரூபாய் விலையில் சுமார் 30.9 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி-க்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அப்படி இந்த நிறுவனம் என்ன செய்கிறது?

 ரேமிங் மாஸ் தயாரிப்பு

ரேமிங் மாஸ் தயாரிப்பு

Raghav Productivity Enhancers ரேமிங் மாஸ் தயாரிக்கிறது, இது உலோகங்களை இணைக்கப் பயன்படும் ஒரு முக்கியமான பொருள். மேலும் இது பல பிரிவுகளில் பயன்படுத்தப்படும் காரணத்தால் வரும்காலத்தில் இதற்கு டிமாண்ட் மிகவும் அதிகம் எனக் கணித்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

 Raghav Productivity Enhancers

Raghav Productivity Enhancers

இதுமட்டும் அல்லாமல் Raghav Productivity Enhancers நிறுவனம் கடந்த 5 வருடத்தில் பிரமிக்க வைக்கும் அளவிற்கு 2,400 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 8 நாட்களாகத் தினமும் அப்பர் சர்கியூட் அளவை தொட்டுள்ளது.

 5 வருட வளர்ச்சி

5 வருட வளர்ச்சி

ஏப்ரல் 13, 2016ல் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் 28.6 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்ட Raghav Productivity Enhancers நிறுவனப் பங்குகள் தற்போது 752.70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 மே முதல் ஆகஸ்ட் வரை

மே முதல் ஆகஸ்ட் வரை

இன்றைய வர்த்தகத்திலும் அப்பர் சர்கியூட் அளவான 5 சதவீத உயர்வைத் தொட்டு 752.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் 03ஆம் தேதி வெறும் 249 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட Raghav Productivity Enhancers நிறுவனப் பங்குகள் இன்று 752.70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

 செபி கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை

செபி கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை

இதேவேளையில் Raghav Productivity Enhancers நிறுவனம் தற்போது செபியின் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் (ASM) வைக்கப்பட்டு நீண்ட கால அடிப்படை கண்காணிப்பில் 2ஆம் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

 18 மாதங்கள்

18 மாதங்கள்

தற்போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கும் ராகவ் நிறுவனத்தின் 6,00,000 பாதுகாப்பற்ற சிசிடி 515 ரூபாய்க்கு வாங்கினாலும் இதற்கு 15 சதவீதம் வருடாந்திர வட்டி அளிக்கப்பட வேண்டும். 18 மாதங்களுக்குப் பின்பு இந்தப் பாதுகாப்பற்ற சிசிடி பங்குகளாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவின் வாரன் பபெட்

இந்தியாவின் வாரன் பபெட்

இந்தியாவின் வாரன் பபெட் எனக் கூறப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் ஒவ்வொரு முதலீடு முடிவுகளும் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் வாரன் பபெட் போலவே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வும் டெக் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறார் எனக் கருத்து நிலவுகிறது.

 மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 420 புள்ளிகள் வரையில் உயர்ந்து பல நாட்களுக்குப் பின்பு 53,000 புள்ளிகளைத் தாண்டி, 53,372.74 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சரிவு அடைந்துள்ளது.

 டைட்டன் நிறுவனம்

டைட்டன் நிறுவனம்

மேலும் டைட்டன் நிறுவனம் இன்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 3.88 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு அளவு சுமார் 1,839 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சன் பார்மா பங்குகள் 2.74 சதவீதம் வரையில் உயர்ந்து 796 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த், டிசிஎல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், பவர்கிரிட், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஐடிசி ஆகிய நிறுவன பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது.

 ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தை

ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தையில் டெல்டா வகை வைரஸ் தாக்கம் காரணமாகப் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் உதவியுடன் இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது. காலை வர்த்தகத்தில் 200 புள்ளிகள் உயர்வில் இருந்த சென்செக்ஸ் தற்போது 440 புள்ளிகள் உயர்வில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh JhunJhunwala investing 31 crores on Raghav Productivity Enhancers multi-bagger stock

Rakesh JhunJhunwala investing 31 crores on Raghav Productivity Enhancers multi-bagger stock
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X