முரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்! மிஸ் பண்ணிட்டோமே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சொந்தக்காரர் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

 

அவருடைய சொத்து மதிப்பு தற்போது 88.9 பில்லியன் டாலராக இருப்பது கூட உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். ஆனால் அதே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஏப்ரல் 2020 காலத்தில் வெறும் 36.8 பில்லியன் டாலராக சரிந்த செய்தி தெரியுமா..?

அப்படி என்றால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து மாத காலத்தில் சுமாராக 52 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறதா? ஆம் 5 மாதத்தில் 52 பில்லியன் டாலர் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் (செப் 04 - 11) 5% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்!

என்ன காரணம்

என்ன காரணம்

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் ப்ரொமோட்டார்களாக இருக்கிறார்கள். இவர்கள் பெயரிலும், இவர்களின் மற்ற சில நிறுவனங்கள் & பார்ட்னர்ஷிப் கம்பெனிகள் பெயரிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் கணிசமான பங்குகள் இருக்கின்றன. எனவே தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ரிலையன்ஸ் பங்கு விலை அதிகரிக்கும் போதெல்லாம் அதிகரிக்கிறது.

சூப்பர் வாய்ப்பு

சூப்பர் வாய்ப்பு

ரிலையன்ஸ் ஆரம்பித்த போதே பணத்தைப் போட்டு இருந்தால் இப்போது கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் என "கோடீஸ்வரனாக அம்பானி கொடுத்த வாய்ப்பு! பயன்படுத்திக் கொண்டீர்களா?" கட்டுரையில் விளக்கி இருந்தோம். ஆனால் சமீபத்தில், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், நல்ல வருமானம் கிடைத்து இருக்கும். அதைத் தான் இங்கு விளக்கப் போகிறோம்.

கொரோனா வைரஸ் வாய்ப்பு
 

கொரோனா வைரஸ் வாய்ப்பு

கடந்த மார்ச் 2020-ல், கொரோனா வைரஸ் பிரச்சனையால், உலகின் பல நாட்டுப் பங்குச் சந்தைகளும் படு பயங்கரமாக வீழ்ச்சி கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 23 மார்ச் 2020 அன்று 884 ருபாய்க்கு வர்த்தகமானது. அன்றே ரிலையன்ஸில் முதலீடு செய்து, நேற்று (11 செப்டம்பர் 2020) 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் 162 % லாபம் பார்த்து இருக்கலாம்.

சரிவு தெரியாதே

சரிவு தெரியாதே

884 ரூபாய் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் மிகப் பெரிய விலை வீழ்ச்சி என எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஆக கொஞ்சமாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மேல் நோக்கி வர்த்தகமாகும் வரை காத்திருந்து, பங்கு விலையின் ஏற்ற டிரெண்டை உறுதி செய்துவிட்டு வாங்குவது தானே புத்திசாலித் தனம். அப்படி ஒரு வாய்ப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொடுத்ததா? ஆம் கொடுத்தது.

ஏப்ரல் வாய்ப்பு

ஏப்ரல் வாய்ப்பு

மார்ச்சில் கண்ட விலை வீழ்சியில் இருந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, ஏப்ரல் 01-ம் தேதி 1,080 ரூபாய்க்கு வந்துவிட்டது. மார்ச் 25-ம் தேதிக்குப் பின், ஒரு முறை கூட ரிலையன்ஸ் பங்கு விலை 1,000 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகவில்லை. எனவே அப்போதே நம்பி, 1080 ரூபாய்க்கு முதலீடு செய்து, நேற்று 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் 114 % லாபம் பார்த்து இருக்கலாம்.

உறுதியான வாய்ப்பு

உறுதியான வாய்ப்பு

டிசம்பர் 2019 கால கட்டத்திலேயே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1,617 ரூபாய் வரை தொட்டு வர்த்தகமானது. மே மாதம் 04-ம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1,435 ரூபாய்க்கு வர்த்தகமானது. மே 2020 காலத்தில், டிசம்பர் 2019 உச்சமான 1,617 ரூபாயைத் தொடும் என்கிற கணக்கிலாவது முதலீடு செய்து இருக்கலாம். செய்த முதலீட்டை நேற்று 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் 61 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

மொமெண்டம்

மொமெண்டம்

01 ஜூன் 2020 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, கிட்டத்தட்ட பழைய விலையான 1,500 ரூபாயைக் கடந்து விட்டது. சரியாக 1,520 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்று வாங்கி, நேற்று 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 52 % லாபம் பார்த்து இருக்கலாம். பொதுவாக ஒரு பங்கின் விலை, தன் பழைய உச்ச விலையைக் கடக்கும் போது, ஒரு மொமண்டத்தில் விலை அதிகரிக்கும். அந்த மொமெண்டத்துக்காகவாவது முதலீடு செய்து இருக்கலாம்.

க்ளியர் சிக்னல்

க்ளியர் சிக்னல்

ஜூன் 01-ம் தேதி கூட 1,520 ரூபாய் தான். ஆனால் 18 ஜூன் 2020 அன்று தெளிவாக, தன் முந்தைய உச்ச விலையான 1,617 ரூபாயைக் கடந்து 1,650 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த தருணத்திலாவது மொமெண்டத்தை எதிர்பார்த்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்து, நேற்று 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் 40 % வருமானம் பார்த்து இருக்கலாம். மொமெண்டத்திலேயே 40 % லாபம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2000 மார்க்

2000 மார்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போல ஒரு பெரிய பங்கு 2000 ரூபாயைக் கடக்கிறது என்றால், அது பங்குச் சந்தையில் மேலும் ஒரு புதிய மொமெண்டத்தைக் கொடுக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கொடுத்தது. ஆக 3 ஆகஸ்ட் 2020 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2,009 ரூபாய்க்கு நிறைவடைந்த போதாவது முதலீடு செய்து, நேற்று 2,319 ரூபாய்க்கு விற்று இருந்தால் 15% லாபம் கொடுத்து இருக்கும்.

செப்டம்பரில் ஒரு மினி ஷாட்

செப்டம்பரில் ஒரு மினி ஷாட்

எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். இந்த 01 செப்டம்பர் 2020 அன்று 2,087 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி, நேற்றைக்கு 2,319 ருபாய்க்கு விற்று இருந்தால் கூட 11 % லாபம் பார்த்து இருக்கலாம். நம்மில் எத்தனை பேர் இந்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டும்? வாய்ப்பை பயன்படுத்தி லாபம் பார்த்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தயாராகுங்கள்

தயாராகுங்கள்

வாய்ப்பை தவற விட்டவர்கள் மனம் தளர வேண்டாம். தினமும் பங்குச் சந்தை பற்றிய செய்திகளையும், தனிப்பட்ட பங்குகள் பற்றிய செய்திகளையும் படியுங்கள். பேப்பர் டிரேட் செய்து பாருங்கள் (பங்கை வாங்கியதாகவும், விற்றதாகவும் நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பார்ப்பது). நிச்சயம் ஒரு கட்டத்தில் உங்களுக்கு பங்குச் சந்தையின் நேக்கு போக்குகள் புரிய வரும். அன்று இது போல பல வாய்ப்புகள் உங்கள் கண்களுக்குத் தெரியவரும். எதிர்காலத்தில் பங்குச் சந்தைகளில் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance industries share price rose 162 percent in last few months

Mukesh ambani leading Reliance industries share price has surged 162 percent in the last few months from its March fall.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X