ரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்ல வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டோமொபைல் துறையை சார்ந்த உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான ரோலக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளது.

 

இந்த பங்கு வெளியீடானது வரவிருக்கும் ஜூலை 28 அன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த பொது பங்கு வெளியீட்டில் பங்கு விலையானது 880 - 900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 வருடத்தில் 745% லாபம்.. ரூ.250 டூ ரூ.1,867.25.. இது வேற லெவல்.. உங்களிடம் இந்த பங்கு இருக்கா..!

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த உற்பத்தி நிறுவனமானது, இந்த பொது பங்கு வெளியீடு மூலம் 731 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் புதிய பங்கு வெளியீடு மூலம் 56 கோடி ரூபாயும், Rivendell PE LLC-யின் பங்கு மூலம் 75 லட்சம் ஈக்விட்டி பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.

நிதி எதற்காக?

நிதி எதற்காக?

ஜூலை 28 அன்று தொடங்கவுள்ள இந்த பங்கு விற்பனை, ஜூலை 30 அன்று முடிவடையவுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியானது, அதன் நீண்டகால மூலதன தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது,

சப்ளை யாருக்கு?
 

சப்ளை யாருக்கு?

ரோலக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வானது நடப்பு நிதியாண்டில் செய்யப்படும், 29வது பொதுப் பங்கு வெளியீடாகவும் உள்ளது.

ரோலக்ஸ் ரிங்க்ஸ் உற்பத்தி நிறுவனம், சர்வதேச அளவில் சப்ளை செய்து வருகின்றது. இது இரு சக்கர வாகனம் மற்றும் பயணிகள் வாகனம், வர்த்தக வாகன பேரிங்குகள், ஆஃப் ஹைவே வாகனங்கள், மின்சார வாகனங்கள், தொழிற்துறை இயந்திரங்கள், காற்றலைகள், ரயில்வே துறை உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் தயாரித்து வழங்கி வருகின்றது.

தற்போதைய பங்கு சந்தை நிலவரம்

தற்போதைய பங்கு சந்தை நிலவரம்

இதற்கிடையில் இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போதும் சற்று சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 20.52 புள்ளிகள் குறைந்து, 52,955.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.70 புள்ளிகள் குறைந்து, 15,853.35 புள்ளிகளாகவும் காணப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolex Rings IPO will open on july 28 and close july 30; check details

Rolex rings plans to IPO on Wednesday, its set price band for the issue in Rs.880 – 900 per share
Story first published: Monday, July 26, 2021, 14:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X