ரூ.1.45 டூ ரூ.88.. 6 மாதங்களில் 5550% லாபம் கொடுத்த பென்னி ஸ்டாக்.. வேற லெவல் பெர்பார்மன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பென்னி பங்குகள் விலை மிக குறைவாக இருக்கும். சந்தை மூலதனமும் குறைவாக இருக்கும். இந்த பங்குகள் ஆபாத்தானவை என்று கூறுவார்கள். ஆனால் அதிலும் நல்ல பங்குகளை தேர்வு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

 

அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு தான் இந்த பென்னி பங்கு. இவற்றில் பெரியளவில் மாற்றமும் இருக்காது. குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும். உதாரணத்திற்கு ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் பங்கினை இன்று நீங்கள் வாங்க வாங்க வேண்டுமெனில் 2,408 ரூபாய் ஒரு பங்கிற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

ஷரத் பைபர்ஸ் நிலை

ஷரத் பைபர்ஸ் நிலை

ஆனால் ஷரத் பைபர்ஸ் (Sharad Fibres) என்ற பென்னி ஸ்டாக்கின் இன்றைய விலையானது 12.72 ரூபாயாகும். ஒரு பங்கின் விலை 13 ரூபாய் என கொண்டால் கூட, 2400 ரூபாய்க்கு உங்களால் 184 பங்குகள் வாங்க முடியும். ஒரு ரிலையன்ஸ் பங்கிற்கு பதிலாக இங்கு 180 பங்குகள் கிடைக்கும். ஆனால் ரிலையன்ஸின் நிலை வேறு. இந்த நிறுவனத்தின் நிலை வேறு. ஆக இந்த பென்னி பங்குகளிலும் தரமான பங்குகளாக பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கிறது என எல்லா பங்கினையும் வாங்கி விட முடியாது.

கொரோனா காலத்தில் ஏற்ற இறக்கம்

கொரோனா காலத்தில் ஏற்ற இறக்கம்

அந்த வகையில அப்படி லாபம் கொடுத்த பென்னி பங்கு தான் Proseed India. சர்வதேச அளவில் கொரோனாவின் தாகக்த்தின் மத்தியில் பங்கு சந்தைகள் தரைதட்டின. அந்த சமயத்தில் பல நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமான சரிவினைக் கண்டன. ஆனால் அந்த சமயத்திலும் சில பங்குகள் நல்ல லாபம் கொடுத்தன. ஏன் இவையெல்லாம் வேலைக்கே ஆகாது என நினைத்த பங்குகள் கூட அந்த சமயத்தில் ஏற்றம் கண்டன. பெரும்பாலான பங்குகள் மார்ச் மாதத்தில் கடுமையான சரிவினைக் கண்டாலும், அதன் பிறகு சில மாதங்களில் 52 வார உச்சத்தினை தொட்டன. இந்த பட்டியலில் சில பென்னி பங்குகளும் அடங்கும்.

Proseed India பங்கு நிலவரம்
 

Proseed India பங்கு நிலவரம்

Proseed India நிறுவனம் ஒரு மல்டிபேக்கர் பென்னி பங்கு எனலாம். கடந்த ஆறு மாதங்களில் இந்த பயோடெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது 1.45 ரூபாயில் இருந்து 82 ரூபாய் என்ற லெவலை தொட்டது. இந்த காலகட்டத்தில் மட்டும் இந்த பங்கின் விலையானது 56.50 மடங்கு அதிகரித்துள்ளது.

புராபிட் புக்கிங்கால் சரிவு

புராபிட் புக்கிங்கால் சரிவு

கடந்த ஒரு மாதமாக புராபிட் புக்கிங் காரணமாக இந்த பங்கின் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது 103 ரூபாய் என்ற லெவலில் இருந்து 82 ரூபாய் என்ற லெவலுக்கு குறைந்துள்ளது. கடந்த மே 20, 2021 நிலவரப்படி இந்த பங்கின் விலையானது 1.45 ரூபாயாகும். டிசம்பர் 2, 2021 நிலவரப்படி இந்த பங்கின் விலை 82 ரூபாயாகும். ஆக இந்த ஆறு மாதத்தில் மட்டும் 5550% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

முதலீட்டின் நிலை

முதலீட்டின் நிலை

இந்த பங்கில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய். 1.90 ரூபாய் என்ற லெவலில் முதலீடு செய்திருந்தோமானால் இன்று அதன் மதிப்[பு 43 லட்சம் ரூபாய். இதே 1.45 ரூபாய் என்ற லெவலில் செய்திருந்தால் 56 லட்சம் ரூபாய்க்கு மேல்.
இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அந்த நிறுவனத்தினை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.1.45 to Rs.82: proceed india multibagger penny stock rises 5550% in 6 months

Rs.1.45 to Rs.82: proceed india multibagger penny stock rises 5550% in 6 months/
Story first published: Friday, December 3, 2021, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X