நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
இன்று காலை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவில் காணப்பட்ட நிலையில், தற்போது 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 1839.20 புள்ளிகள் குறைந்து, 49,200 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 538.50 புள்ளிகள் குறைந்து, 14,558.85 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் முறையே 2.15% மற்றும் 1.19% சரிவிலும் காணப்படுகிறது. அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் கையில் உள்ள ஆர்டர்களை விற்க தூண்டுகிறது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ல முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை விற்க முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக சந்தை தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்று இந்தியாவின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி விகிதம் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் சாதகமாக வந்து கொண்டிருந்தாலும், புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது.
அதோடு ரூபாயின் மதிப்பும் இன்று காலையில் தொடக்கத்திலேயே 62 சரிந்து 73.04 ரூபாயாக தொடங்கியது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
குறிப்பாக நிஃபிடி குறியீட்டில் சன் பார்மா மட்டும் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஜே எஸ் டபள்யூ, கோடக் மகேந்திரா, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டிலும் சன் பார்மா மட்டும் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எம் & எம், கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
முந்தைய அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இதனால் இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன.