பிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரி ஏற்றம் கண்ட சென்செக்ஸ்! 1,470 புள்ளிகள் ஏற்றம் நிலைக்காதோ?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு சென்செக்ஸ் இண்டெக்ஸின் உச்சம் என்றால் அது 33,887 புள்ளிகள் தான்.

இப்போது மீண்டும் சென்செக்ஸ் அந்த உச்சப் புள்ளியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

மோடி பேச்சு
 

மோடி பேச்சு

மே 12, 2020 அன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மக்களிடத்தில் மீண்டும் உரையாற்றினார். அதில் கொரோனாவுக்குப் பின், இந்திய சுய சார்பாக மாற வேண்டும். இந்திய பொருட்களை வாங்குங்கள் என உள் நாட்டு வியாபாரத்தை ஊக்குவித்து இருக்கிறார். அதோடு தனியாக பொருளாதாரத்துக்கு சிறப்பு பேக்கேஜ்களையும் அறிவித்து இருக்கிறார். இந்த பேச்சை இந்திய பங்குச் சந்தையினர் பாசிட்டிவ்வாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 31,371 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,841 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இது 1,470 புள்ளிகள் ஏற்றம். சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 32,064 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 705 புள்ளிகள் ஏற்றத்தில் 32,076 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,569 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,211 ஏற்றத்திலும், 286 பங்குகள் இறக்கத்திலும், 72 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்
 

உலக பங்குச் சந்தைகள்

மே 12, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 2.06 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 0.93 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.39 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.05 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஆசியாவில் இன்று

ஆசியாவில் இன்று

இன்று மே 13, 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கி ஹேங்செங், தைவானின் தைவான் வெயிடெட் தவிர மற்ற எல்லா சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இப்படி உலக சந்தைகளில் நல்ல ஏற்றம் இல்லாத போது கூட, இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டிருப்பது கவனிக்கத்தகக்து.

செக்டார்

செக்டார்

நிஃப்டி இண்டெக்ஸ்களில் தற்போது மீடியா மற்றும் பார்மா தவிர் மற்ற எல்லா துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. வங்கி, நிதி சேவைகள், ஆட்டோமொபைல் போன்ற துறைகள் ஒட்டு மொத்த சந்தையையும் தூக்கி நிறுத்திக் கொண்டு இருக்கின்றன.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

ஐசிஐசிஐ பேங்க், லார்சன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நெஸ்ட்லே, சன் பார்மா, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீ, கெயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

சந்தேகம் தான்

சந்தேகம் தான்

பிரதமர் மோடியின் உரைக்கு மட்டுமே சென்செக்ஸ் செவி சாய்த்து இருக்கிறது. வேறு எந்த உலக பொருளாதார காரணிகளும், இந்திய சந்தைக்கு சாதகமாக இல்லை என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. எனவே இந்த 1,470 புள்ளிகள் ஏற்றம் நிலைப்பது சிரமம் போலத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex is trading high due to PM Narendra modi yesterday speech

The Bombay stock market benchmark index Sensex is trading high due to PM Narendra modi yesterday speech.
Story first published: Wednesday, May 13, 2020, 9:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X