அமெரிக்கப் பெடரல் வங்கி பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், பணவீக்கத்தால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியாது என அமெரிக்கச் சந்தை முதலீட்டாளர்கள் கணித்துள்ள நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்ட வெளியேற்றியுள்ளனர்.
அமெரிக்காவைப் போல் இந்தியா, பிரிட்டனும் வட்டியை உயர்த்தியுள்ள நிலையில் ஆசியப் பங்குச்சந்தை இன்று அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
May 6, 2022 4:17 PM
சென்செக்ஸ் குறியீடு 866.65 புள்ளிகள் சரிந்து 54,835.58 புள்ளிகளை அடைந்துள்ளது
May 6, 2022 4:17 PM
நிஃப்டி குறியீடு 271.40 புள்ளிகள் சரிந்து 16,411.25 புள்ளிகளை அடைந்துள்ளது
May 6, 2022 4:17 PM
நிஃப்டி பார்மா குறியீடு 1.5 சதவீதம் சரிவு
May 6, 2022 4:17 PM
சோமேட்டோ, பாலிசிபஜார், இன்போ எட்ஜ் ஆகியவை 52 வார சரிவை எட்டியுள்ளது
May 6, 2022 4:17 PM
இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 5.10 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்
May 6, 2022 1:46 PM
சென்செக்ஸ் குறியீடு 827.38 புள்ளிகள் சரிந்து 54,874.85 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 1:46 PM
நிஃப்டி குறியீடு 255.90 புள்ளிகள் சரிந்து 16,426.75 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 1:46 PM
மார்ச் காலாண்டில் கனரா வங்கியின் லாபம் 65 சதவீதம் சரிந்து 1666.2 கோடி ரூபாயாக உள்ளது
May 6, 2022 1:46 PM
எல்ஐசி ஐபிஓ 3வது நாளில் 1.2 மடங்கு முதலீட்டை பெற்றது
May 6, 2022 1:45 PM
நிஃப்டி மெட்டல் பங்குகள் 4 சதவீதம் சரிவு
May 6, 2022 1:45 PM
வேதாந்தா பங்குகள் 10.80 சதவீதம் சரிவு
May 6, 2022 1:45 PM
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 7.27 சதவீதம் சரிவு
May 6, 2022 12:26 PM
சென்செக்ஸ் குறியீடு 869.33 புள்ளிகள் சரிந்து 54,832.90 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 12:26 PM
நிஃப்டி குறியீடு 277.60 புள்ளிகள் சரிந்து 16,405.05 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 12:26 PM
ஐடிசி மற்றும் பிற FMCG நிறுவனங்கள் இந்த மோசமான சூழ்நிலையில் அதிக முதலீட்டை பெற்று வருகிறது
May 6, 2022 12:25 PM
14 வருட உச்சத்தில் இயற்கை எரிவாயு விலை
May 6, 2022 12:25 PM
உக்ரைன் பிரச்சனையில் 4 மில்லியன் டாலர் வர்த்தகத்தை இழந்தோம் - Intellect Design அருண் ஜெயின்
May 6, 2022 12:25 PM
3வது நாளாக அதானி வில்மார் லேவர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
May 6, 2022 12:25 PM
வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவு
May 6, 2022 12:25 PM
சோலார் மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு
May 6, 2022 12:25 PM
எல்ஐசி ஐபிஓ 3வது நாளில் 1.09 மடங்கு பங்குகளுக்கு முதலீடு செய்துள்ளது
May 6, 2022 11:13 AM
சென்செக்ஸ் குறியீடு 982.56 புள்ளிகள் சரிந்து 54,719.67 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 11:13 AM
சென்செக்ஸ் 56000 புள்ளிகள் அளவீட்டையும் இழந்தது
May 6, 2022 11:12 AM
நிஃப்டி குறியீடு 314.50 புள்ளிகள் சரிந்து 16,368.15 புள்ளிகளை எட்டியுள்ளது
May 6, 2022 11:12 AM
இறக்குமதி நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து அலைகளையும் இயக்க மத்திய அரசு உத்தரவு
May 6, 2022 11:12 AM
UPL பங்குகள் 3 சதவீதம் சரிவு
May 6, 2022 11:12 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது
May 6, 2022 11:12 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 36 பைசா சரிந்து 76.62 ஆக உள்ளது
May 6, 2022 11:12 AM
2022ல் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதமாக இருக்கும் என பேங்க் ஆப் இங்கிலாந்து கணிப்பு
May 6, 2022 11:12 AM
வோல்டாஸ் பங்குகள் 10 சதவீதம் சரிவு
May 6, 2022 11:11 AM
பிட்காயின், கார்டானோ, சோலானோ ஆகியவை 15 சதவீதம் வரையில் சரிவு
May 6, 2022 11:11 AM
ஆசிய சந்தை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed