பெரும் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை.. 21 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று 120 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது.

 

சர்வதேசச் சந்தையில் இன்று கலவையான வர்த்தக சூழ்நிலை நிலவியதால் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனம் நிலவி வருகிறது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையில் டாவ் ஜோன்ஸ், எஸ் & பி 500 குறியீடுகள் சரிந்த நிலையில், நாஸ்டாக் 0.87 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

பெரும் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை.. 21 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!