வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான இன்று வரலாற்று உச்சத்தில் இருந்து இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றது.
கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து உச்சத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டு வருகிறது. சந்தை ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று இறக்கம் கண்டு காணப்பட்டது. இந்திய பங்கு சந்தைகள் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவினை கண்டுள்ளன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 146 புள்ளிகள் குறைந்து, 43,447.35 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 34.50 புள்ளிகள் குறைந்து 12,714.70 ஆகவும் தொடங்கியது.
கடந்த வாரத்தில் அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாகவே சந்தை புதிய உச்சத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று நான்காம் கட்டமாக நிதி ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்பினை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ள நிலையில், அது எந்த துறைக்கு சாதகமாக இருக்கும். எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது, இதன் காரணமாக சந்தைகள் சற்று தடுமாற்றத்தில் உள்ளன.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் பெரும்பாலும் சற்று சரிவிலும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்ப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், சன் பார்மா, சிப்லா, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எம்&எம், சன் பார்மா,இன்ஃபோசிஸ், லார்சன், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 242 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 43,351.42 ஆகவும், இதே நிஃப்டி 62.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,686.70 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.44 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய நாள் 74.37 ஆக முடிவடைந்தது.