நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 297.74 புள்ளிகள் குறைந்து, 51,146.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 124.80 புள்ளிகள் குறைந்து, 15,120.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 712.84 புள்ளிகள் குறைந்து, 50,731.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 213.80 புள்ளிகள் குறைந்து, 15,031.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 470 பங்குகள் ஏற்றத்திலும், 971 பங்குகள் சரிந்தும், 70 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி பேங்க், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், கிரசிம், ஓஎன்ஜிசி, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜேஎஸ்டபள்யூ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பின்செர்வ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா அதிகரித்து 73.03 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.36 ரூபாயாக இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் குழப்பமான நிலையில், அமெரிக்காவின் 10 வருட பத்திர லாபமானது வலுவாக காணப்படுகிறது. இது டாலரின் மதிப்பினை வலுவடைய வைக்கிறது. அதன் எதிரொலி இந்திய ரூபாயின் மதிப்பிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 727.65 புள்ளிகள் குறைந்து, 50ம்717.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 211.30 புள்ளிகள் குறைந்து, 15,034.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.