பொதுவாக பங்கு சந்தை முதலீட்டில் பல துறை பங்குகள் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது மிட் கேப் பங்குகள் பற்றித் தான்.
மிடில் கேபிடலைசேஷன் பங்குகள் என்பதன் சுருக்கமே மிட் கேப் பங்குளாகும். ஒரு நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகளை அந்த நிறுவனத்தின் ஒரு பங்கினை,தற்போதைய சந்தை மதிப்பால் பெருக்கிக் கிடைப்பதே கேபிடலைசேஷன் ஆகும்.
நடப்பு காலாண்டர் ஆண்டில் 27 மிட் கேப் பங்குகள் 50% மேலாக லாபம் கொடுத்துள்ளன. இதில் ஆறு பங்குகள் ஒரு வருடத்தில் முதலீட்டினை இருமடங்காக அதிகரித்துள்ளது. பெரும்பாலான சிறந்த மிட்கேப் பங்குகளின் இலக்குகள் அவற்றின் விலைகள், எதிபார்த்ததை விட சற்று கூடியுள்ளது.
சென்னை நிறுவனத்தில் முதலீடு செய்த RK தமனி.. கிடுகிடு ஏற்றத்தில் பங்கு விலை..!

ஜேஎஸ்டபள்யூ எனர்ஜி
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜேஎஸ்டபள்யூ எனர்ஜி நிறுவனமாகும். இந்த மிட் கேப் பங்கின் விலையானது 329% வரையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஜேஎஸ்டபள்யூ எனர்ஜி பங்கு குறித்து 10 நிபுணர்களில் 9 பேர் இந்த பங்கினை விற்க கூறி வருகின்றனர். இதன் மீடியம் டெர்ம் இலக்கு 138.92 ரூபாயாகும். இதன் பங்கு விலையானது கீழாக 53 சதவீதம் சரிவினை காணலாம் என கணித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி பங்கின் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து, 1,278.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் நடப்பு ஆண்டில் இதுவரையில் 183 சதவீதம் ஏற்றத்தில் தான் உள்ளது. இந்த பங்கின் மீடியம் டெர்ம் இலக்கு 741.80 ரூபாயாக கணித்துள்ளனர். இது சுமார் 11% சரிவினைக் காணலாம் என கணித்துள்ளனர்.

டாடா பவர்
அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் பங்கு டாடா பவர். இந்த பங்கின் விலையானது 180% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் மீடியம் டெர்ம் இலக்கு விலை 185.35 ரூபாயாகும். இதன் விலையானது 14% வரை சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைண்ட் ட்ரீ
இதே மைண்ட் ட்ரீ பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் 167% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் மீடியம் டெர்ம் இலக்கு விலை 4046.28 ரூபாயாக மதிப்பிட்டுள்ளனர். இது சுமார் 10% சரிவாகும். இந்த கணிப்பினை ஒருவர் இருவர் அல்ல, 25 ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எம்பஸிஸ் & அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
எம்பஸிஸ் மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் இரு மிட் கேப் மல்டி பேக்கர் பங்கானது, 9 சதவீதம் ஏற்றத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் - ன் பங்கு விலையானது, 13 சதவீதம் அதிகரித்து, 5,395.74 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்இ மிட் கேப் பங்குகள்
பிஎஸ்இ மிட் கேப் பங்குகளில் 106 பங்குகள்33 சதவீதம் லாபம் கொடுத்துள்ளன. அதானி பவர், எஸ்.ஆர்.எஃப் மற்றும் ஏபிபி இந்தியா உள்ளிட்ட 3 பங்குகள் 80 - 100% ஏற்றத்தில் காணப்படுகின்றன.
ஆயில் இந்தியா, டோரண்ட் பவர், குஜராத் கேஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட பங்குகள் 50 - 70 சதவீதம் ஏற்றத்தினை கண்டுள்ளன.

வலுவான லாபம்
ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் சில்லறை, பி ஹெச் இ எல், கிளாண்ட் பார்மா, ஆஸ்டிரால் கியூமின்ஸ் இந்தியா, ஜீ எண்டர்டெயின்மெண்ட், தி இந்தியன் ஹோட்டல்ஸ், கிரிசில் மற்றும் மோதிலால் ஆஸ்வால் பைனான்ஷியல் சர்வீசஸ் உள்ளிட்ட மிட் கேப் பங்குகள் வலுவான வருவாயினை கொடுத்துள்ளன.