நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை.. லாபம் கிடைக்க இந்த 10 பங்குகளை வாங்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய வாரங்களாகவே இந்திய சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. இதனால் பல தரப்பு முதலீட்டாளர்களின் கவனமும் பங்கு சந்தையின் பக்கம் திரும்பியுள்ளது.

 

எனினும் ஏற்கனவே வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இனியும் அதிகரிக்குமா? தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்வது சரியான ஆப்சனா? இது சரியான நேரமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த வகையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் பரிந்துரை செய்துள்ள 10 பங்குகளை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

வளர்ச்சி காணலாம்

வளர்ச்சி காணலாம்

தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், தனியார் நுகர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தேவை மற்றும் நுகர்வானது அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது மேன்மேலும் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மோதிலாஸ் ஆஸ்வால் நிறுவனம் 10 பங்குளை பரிந்துரை செய்துள்ளது. அதில் நாம் இன்று முதலாவதாக பார்க்கவிருப்பது

சோலமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் (cholamandalam investment) - CMP - ரூ.576.35

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் (l&t technology services) - CMP - ரூ.4316.40

மேக்ஸ் பைனான்ஷியல் (max financial services) - CMP - ரூ.1,100

தீபக் நைட்ரைட் (deepak nitrite) - CMP - ரூ.2,362

ஜேகே சிமெண்ட்ஸ் (jk cement ltd) - CMP - ரூ.3,560

endurance technologies - CMP - ரூ.1,587

கிளீன் சயின்ஸ் (clean science) - CMP - ரூ.1612

ஆதித்யா பிர்லா பேஷன் (adithya birla fashion) - CMP - ரூ.214.80

ஓரியண்ட் எலக்ட்ரிக் (orient electric) - CMP - ரூ.330.45

சோலாரா ஆக்டிவ் பார்மா (solara active pharma)- CMP - ரூ.1702

சோலமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்
 

சோலமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்

லார்ஜ் கேப் நிறுவனத்தினை சேர்ந்த பங்கான சோலமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தினை பல்வேறு நிபுணர்களும், தரகு நிறுவனங்ளும் வாங்க பரிந்துரை செய்து வருகின்றனர்.

இது கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது, சற்று அதிகரித்து, 2481.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகரலாபம் 329.12 கோடி ரூபாயாக அத்கரித்துள்ளது.

டெக்னிக்கலாகவும் இந்த பங்கின் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் சந்தை மூலதனம் 47,359 கோடி ரூபாயாகும்.

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜுன் காலாண்டில் வலுவான வருவாயினை பதிவு செய்த நிலையில், அதன் பங்கு விலையும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

வருவாய் விகிதம் இன்னும் வரவிருக்கும் காலாண்டில் அதிகரிக்கும் என அந்த நிறுவனம் மதிப்பீடு செய்துள்ள நிலையில், இதன் பங்கு விலை இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேக்ஸ் பைனான்ஷியல் பங்கு விலை

மேக்ஸ் பைனான்ஷியல் பங்கு விலை

மேக்ஸ் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு மிட் கேப் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் கொரோனாவின் காரணமாக கடந்த ஜூன் காலாண்டில் அதன் வருவாயில் 39% மேலாக சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நீண்டகால நோக்கில் இதன் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

தீபக் நைட்ரைட் (deepak nitrite)

தீபக் நைட்ரைட் (deepak nitrite)

தீபக் நைட்ரைட் நிறுவனம் முன்னணி கெமிக்கல் சப்ளையர் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் கடந்த ஜூன் காலாண்டில் 205% அதிகரித்து, 302.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இத நிகர விற்பனையானது 126% அதிகரித்து 1,526 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேகே சிமெண்ட்ஸ் நிலவரம் என்ன?

ஜேகே சிமெண்ட்ஸ் நிலவரம் என்ன?

ஜேகே சிமெண்ட்ஸ் நிறுவனம் அதன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

இது தற்போது 15 மில்லியன் டன்னாக இருக்கும் இந்த நிறுவனத்தின் உற்பத்தியினை, 23 மில்லியன் டன்னாக அதிகரிக்க திட்டமிடுள்ளது. குறிப்பாக இந்த விரிவாக்கம் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருக்கலாம் என தெரிகின்றது.

இதற்கிடையில் இதன் பங்கு விலையும் சீரான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Endurance technologies நிலவரம் என்ன?

Endurance technologies நிலவரம் என்ன?

Endurance technologies நிறுவனம் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் சமீபத்தில் ஐரோப்பிய சந்தையிலிருந்து சில புதிய ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாயானது 7706.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 614 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் நிகரலாபமும் வரிக்கு பின்பு 96.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் தேவை அதிகரித்து வருகின்றது. இதனால் புதிய ஆர்டர்களை தொடர்ந்து பெற்று வருவதாகவும் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கிடையில் இதன் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி

கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி

கெமிக்கல் நிறுவனமான கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இந்தியாவினை பொறுத்தவரையில் கெமிக்கல் தொழில் என்பது, பல MNC- களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக உள்ளது. இது பல்வேறு சாதகமான காரணிகளின் மத்தியில் முன்னேறி வருகின்றது.

குறிப்பாக சீனாவில் மாசு விதிமுறைகளின் மத்தியில் உற்பத்தி குறைக்கப்பட்டு வருகின்றது. ஆக இது இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

அதோடு இந்தியாவில் பிஎல்ஐ திட்டம் போன்ற அரசின் சலுகைகள், சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு வரி அதிகம் உள்ளிட்ட பல காரணிகள், இந்திய கெமிக்கல் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன.

இதற்கிடையில் தான் தற்போது உள்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள கிளீன் சயின்ஸ் & டெக்னாலஜி நிறுவனம், நல்ல வலுவான லாபமுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆக வருங்காலத்திலும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா பிர்லா பேஷன்

ஆதித்யா பிர்லா பேஷன்

தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த நிறுவனம் சமீபத்தில் ஆதித்யா பிர்லா பேஷன் ரீடைல் நிறுவனம் பாரம்பரிய ஆடைகள் மற்றும் டிசைனர் பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யும் பொருட்டும், இந்தியாவில் மிகவும் பிரபலமான Sabyasachi மற்றும் Tarun Tahiliani ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளது.

அதோடு இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவானது 4,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கிடையில் தான் இதன் பங்கு விலையானது அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஓரியண்ட் எலக்ட்ரிக் லிமிடெட்

ஓரியண்ட் எலக்ட்ரிக் லிமிடெட்

நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் இந்த பங்கின் விலையானது ஏற்கனவே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவை என்பது இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோலாரா ஆக்டிவ் பார்மா

சோலாரா ஆக்டிவ் பார்மா

கொரோனாவின் வருகைக்கு பின்னர் பொதுவாகவே பார்மா பங்குகள் ஏற்றத்தினை கண்டு வந்தன. இதற்கிடையில் தேவை அதிகரித்து வரும் நிலையில் நிபுணர்கள் பார்மா பங்குகள் பலவற்றை பரிந்துரை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஸ்மால் கேப் பங்கான சோலாரா ஆக்டிவ் பார்மா பங்கினையும் பரிந்துரை செய்துள்ளனர்.

* மேற்கண்ட இந்த பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இதில் முதலீடு செய்யும் முன்பு இதனை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு, பின்னர் முதலீடு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stock recommendations: 10 stocks to buy now india

Latest Stock recommendations.. 10 stocks to buy now india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X