தவறியும் இந்த பங்குகளை இப்போதைக்கு வாங்கிடாதீங்க.. F&Oல் தடை.. எப்போது மீண்டும் வர்த்தகமாகும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தையில் நல்ல ஏற்ற இறக்கம் இருக்கும்போது முதலீடு செய்தால், நல்ல லாபம் பார்க்கலாம் என முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கி வைப்பார்கள். உதாரணத்திற்கு ரிலையன்ஸ் காலாண்டு முடிவுகள் நாளை வெளியாகிறது எனில், அதன் லாபம் அதிகரிக்கலாம் என்ற யூகத்தில் பங்குகள், ஒரு சில நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டு இருக்கும்.

 

இந்த சமயத்தில் இன்ட்ராடே வர்த்தகர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். அதேபோல அந்த காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கும் நாள் வரையில் வாங்கி விற்று லாபம் பார்க்கலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும். இதனால் ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவு அந்த சமயத்தில் வாங்கப்படும். அது NSEயால் நிர்ணயிக்கப்பட்ட 95% தாண்டினால், எஃப் &ஓ பங்குகள் தடை செய்யப்படும்.

அப்படி ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள், மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும்போது இந்த பங்குகள் மீண்டும் எஃப் & ஓ வர்த்தகத்திற்கு வரும்.

என்ன பங்குகள் தடை

என்ன பங்குகள் தடை

அடுத்த வாரம் எஃப் &ஓ (F&O) எக்ஸ்பெய்ரி ஆகும் நிலையில் தற்போது 10 பங்குகள் என்.எஸ்.இ-யில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 10 பங்குகளின் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டியுள்ளது. இதில் அமர ராஜா பேட்டரீஸ், எஸ்கார்ட்ஸ், வோடபோன் ஐடியா, ஐஆர்சிடிசி, நால்கோ, பஞ்சாப் நேஷனல் வங்கி, செயில்(SAIL), பி.ஹெச்.இ.எல். (BHEL), சன் டிவி உள்ளிட்ட பங்குகள் எஃப் &ஓவில் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை தடை செய்யலாம்

இவற்றை தடை செய்யலாம்

மேலும் டாடா பவர் மற்றும் எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பங்குகள் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த பங்குகளின் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டியுள்ளது.

என்ன பிரச்சனை
 

என்ன பிரச்சனை

இவ்வாறு எஃப் &ஓ (F&O)வில் தடை செய்யப்பட்ட பங்கினை வாங்கினால் உங்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படலாம். ஆக இதனை முன்னதாக தெரிந்து கொண்டு அதன் பின்னர், எஃப் &ஓவில் வர்த்தகம் செய்வது நல்லது. இதன் மூலம் அதிகப்படிப்பான அபராதம் செலுத்துவதை தவிர்க்க முடியும்.

எப்படி தெரிந்து கொள்வது?

எப்படி தெரிந்து கொள்வது?

இதில் சில பங்குகள் 100% தாண்டியிருக்கலாம். ஒரு பங்கினை வர்த்தக முடிவில் தான் தடை செய்யமுடியும். ஆக இன்று காலையில் 86% இருந்த பங்கின் விகிதமானது முடிவில் 100 தாண்டியுள்ளது. இதனால் தடை செய்யப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: f ampo எஃப் ampஓ
English summary

Tata power, IRCTC, PNB among 10 shares under F&O ban on the NSE

Tata power, IRCTC, PNB, NALCO, SAIL among 10 shares under F&O ban on the NSE
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X