இந்த பங்குகள் மீடியம் டெர்மில் ஏற்றம் காணலாம்.. தரகு நிறுவனம் அசத்தல் பரிந்துரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது சூதாட்டம் செய்வதற்கு சமம் என்ற கருத்து இந்தியாவில் பரவலாக நிலவி வருகின்றது. ஆனால் பங்கு சந்தை என்பது அப்படி அல்ல. பங்கு சந்தை முதலீட்டின் மூலம் லாபம் பார்க்கும் முதலீட்டாளர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

 

ஆக பங்கு சந்தையினை சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் நாம் அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் இயங்கினால் மட்டுமே லாபத்தை பெற முடியும்.

ஹெச்டிஎப்சி: புதிய குளோபல் மியூச்சவல் பண்ட் திட்டம்..! 23 நாடுகளில் முதலீடு..!

பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

அந்த வகையில் இன்று இரண்டு பங்குகளை பகுப்பாய்வு செய்து வாங்கலாம் என ஷேர்கான் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. ஒன்று பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ். மற்றொன்று சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ். இந்த பங்குகள் உங்களுக்கு நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என கணித்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிலவரம்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிலவரம்

நாம் இன்று முதலில் பார்க்கவிருப்பது பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பற்றி தான். இந்த பங்கின் நீண்டகால இலக்கு விலையானது 4,740 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை விலை 4,068 ரூபாய் ஆகும்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீடியம் மற்றும் நீண்டகால நோக்கில் வளர்ச்சிக்கான உத்திகளை கொண்டுள்ளது. இதனால் இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சந்தையில் விரிவாக்கம்
 

சந்தையில் விரிவாக்கம்

பிஸ்கட் சந்தையில் இந்த நிறுவனம் தனது வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக புதுமை மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றையும் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விரிவாக்கம் செய்து வருகின்றது. இதனால் வரும் ஆண்டுகளில் இதன் வருவாயை மேம்படுத்த இந்த விரிவாக்கம் உதவும். எனினும் அதிகளவிலான மூலதன செலவினங்களால் இதில் சற்று தாக்கம் இருக்கலாம் என ஷேர்கான் கூறியுள்ளது.

பிரிட்டானியாவின் இலக்கு விலை

பிரிட்டானியாவின் இலக்கு விலை

மேலும் புதிய பொருட்கள் அறிமுகம், இதனால் விற்பனை கூடலாம் என்றும், இது பிரிட்டானியாவின் நடுத்தர கால வளர்ச்சிக்கு துணை புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

பிரிட்டானியாவின் முக்கிய வகைகளில் வலுவான வளர்ச்சி விகிதம், லாபம் உருவாக்கும் திறன், தள்ளுபடி மதிப்பீடுகள் உள்ளிட்ட பல அம்சங்களுக்கு மத்தியில், எஃப்.எம்.சி.ஜி துறையில் நல்ல முதலீட்டு தேர்வாக அமையலாம். இதனால் இதன் பங்கு விலை இலக்கினை 4,740 ரூபாயாக நிர்ணயித்துள்ளதாகவும் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிலவரம் என்ன?

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிலவரம் என்ன?

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் இலக்கினை ஷேர்கான் நிறுவனம் 1,100 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதன் தற்போதைய விலை நிலவரம் 942 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் நல்ல நிலையில் உள்ளது. இது பண்ணை கருவிகள், அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள், தொழிற்துறைகளுடன் மின் உற்பத்தி நிறுவனத்தின் ஆர்டர்கள் ஆரோக்கியமான அளவில் உள்ளன. அதோடு உள்நாட்டு ஆர்டர்கள் வலுவான மீட்பினை கண்டுள்ளன.

விரிவாக்கத்திற்கான முதலீடு

விரிவாக்கத்திற்கான முதலீடு

இந்த நிறுவனம் 2017 - 2020ம் நிதியாண்டிற்கு இடையில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து விரிவாக்கம் செய்துள்ளது. இதற்கிடையில் தற்போது தனது திறனில் 80% செயல்படுகின்றது. சமீபத்திய கேபெக்ஸ் திட்டம் மூலம், எந்த வித முதலீடும் இல்லாமல், 25 - 30% வருவாயை அதிகரிக்க உதவுகின்றது. மொத்தத்தில் இதன் வளர்ச்சி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

*இந்த பகுப்பாய்வானது ஷேர்கான் நிறுவனத்தின் கணிப்பாகும். ஆக முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் இறுதியாக அலசி ஆராய்ந்து பின்னர் முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 2 stocks to buy from auto and FMCG according to sharekhan

Stock market updates.. Brittania and sundaram fasteners shares to buy from auto and FMCG according to sharekhan
Story first published: Wednesday, September 22, 2021, 19:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X