புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதன் 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது. இது முதலீட்டாளர்களின் முதலீட்டினை கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

 

இது பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலவின் போர்ட்போலியோவில் உள்ள முக்கிய பங்குகளில் ஒன்றாகும்.

இதில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் 1.15 கோடி பங்குகளும் (4.31% பங்குகளும்) அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 85 லட்சம் பங்குகளும் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி உள்ளன.

13 மாடி கனவு வீட்டை கட்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!

டெக்னிக்கல் & ஃபண்டமெண்டல் காரணிகள்

டெக்னிக்கல் & ஃபண்டமெண்டல் காரணிகள்

கடந்த மூன்று தினங்களில் மட்டும் இப்பங்கின் விலையானது 4.48 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 100 நாள், 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வரும் ஒரு பங்காகும். ஆக டெக்னிக்கலாகவும் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஃபண்டமெண்டல் ரீதியாகவும் இப்பங்கானது ஹாஸ்பிட்டாலிட்டி துறையினை சேர்ந்தது. கொரோனாவின் வருகைக்கு பிறகு தற்போது தான் இத்துறையானது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

வாங்கலாம்

வாங்கலாம்

ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டி நிறுவனம் இப்பங்கினை வாங்கி வைக்கலாமென பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்கின் அவுட்லுக் ஆனது ஏற்றம் காணும் விதமாக உள்ளது என மார்ச் 21 அன்று வாங்கி வைக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதன் இலக்கு விலையாக 332 - 350 ரூபாயினையும் கொடுத்திருந்தது. இதன் தற்போதைய விலை நிலவரம் 320 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம் என்ன?
 

இன்றைய நிலவரம் என்ன?

இன்று என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.27% அதிகரித்து., 320.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 323 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 314.35 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 323 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 142.20 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 2.43% அதிகரித்து, 320.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 323 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 314.45 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 323 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 142 ரூபாயாகும்.

இலக்கு விலை என்ன?

இலக்கு விலை என்ன?

டிப்ஸ்2டிரேட்ஸின் இணை நிறுவனர் மற்றும் அதன் பயிற்சியாளருமான ஏஆர் ராமசந்திரன், 245 - 308 ரூபாய்க்கு இடையேயான வர்த்தக காலகட்டத்திற்கு பிறகு, இந்த லெவலை உடைத்து காட்டியுள்ளது. இதனால் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுஇறது. தற்போது ஹாஸ்பிட்டாலிட்டி துறையும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஆக 308 ரூபாய்க்கு மேலாக இப்பங்கின் விலை முடிந்தால், அதன் அடுத்த இலக்கு 346 மற்றும் 405 ரூபாய் என்ற இலக்கினை தொடலாம். இதன் சப்போர்ய்ட் லெவல் 300 - 308 ரூபாய் என்ற லெவலிலேயே இருக்கலாம்.

பட்டையை கிளப்பிய லாபம்

பட்டையை கிளப்பிய லாபம்

டெல்டா கார்ப் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபமானது 5398% அதிகரித்து 70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் விகிதம் 120.82 கோடி ரூபாயில் இருந்து 247.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டெல்டா கார்ப் கேசினோ, ரியல் எஸ்டேட், கேமிங், ஹாபிட்டாலிட்டி என பல துறைகளிலும் செயல்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This rakesh jhunjhunwala stocks doubled investor wealth in 1 year, its hit in 52 week high today

This rakesh jhunjhunwala stocks doubled investor wealth in 1 year, its hit in 52 week high today/புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணத்தை 2 மடங்காக அதிகரிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X