1 வருடத்தில் இருமடங்கு லாபம்.. கோஃபோர்ஜ் கொடுத்த நல்ல வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோஃபோர்ஜ் லிமிடெட் (Coforge Limited) நிறுவன பங்கின் விலையானது 12 மாதங்களில் 2,096 ரூபாயில் இருந்து, 5,544 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 165% அதிகரித்துள்ளது.

 

இதே காலகட்டத்தில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் 52% ஏற்றத்திலும், எஸ்&பி சென்செக்ஸ் 52% ஏற்றத்திலும் காணப்படுகிறது.

இந்த பங்கின் விலையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,239% ஏற்றத்திலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 102% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

லட்சாதிபதியாகியிருக்கலாம்

லட்சாதிபதியாகியிருக்கலாம்

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 2.40 லட்சம் ரூபாயாகும். இதே 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 13.22 லட்சம் ரூபாயாகும். இன்று இதன் விலையானது 2% அதிகரித்து, அதன் வரலாற்று உச்சமான 5,544 ரூபாயினை தொட்டது.

இன்னும் அதிகரிக்கலாம்

இன்னும் அதிகரிக்கலாம்

இதே இதன் சந்தை மூலதனம் 32,976 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக இது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.

டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம்
 

டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம்

கடந்த ஆண்டினை காட்டிலும் நிறுவனம் நல்ல வளர்ச்சி காணலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த பங்கின் விலையானது MACD, Bollinger band, KST மற்றும் DOW உள்ளிட்ட டெக்னிக்கல் குறியீடுகள் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. அதோடு பல நிதி நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டியுள்ளது.

லாபம் தான்

லாபம் தான்

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் 1,057 கோடி ரூபாய் லாபம் கண்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 38.3% அதிகரித்து, 1,461.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தும் விதமாக, 2021 - 22ம் ஆண்டிற்கு ஒரு பங்கிற்கு 13 ரூபாய் டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

கோஃபோர்ஜ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது 1.73% குறைந்து, 5,350.65 ரூபாயாக குறைந்துள்ளது. இன்றைய உச்சம் 5,544.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்றைய குறைந்தபட்ச விலையாக 5,326 ரூபாயாக இருந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 5,544.65 ரூபாயாக தொட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This stock doubled shareholders money in just 1 year

Shares of Coforge Limited surged from Rs.2,096 to Rs.5,544 today in the last 1 year, its yielding around 164.5%in this period.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X