2 வருடத்தில் இல்லாத அளவு மோசமான 1 நாள் சரிவு.. அமெரிக்க சந்தையில் என்ன தான் நடக்குது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தைகள் கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையில் இருந்து பெரியளவில் அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தன. இதன் காரணமாக பங்கு சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றது.

 

அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்ததே, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் தற்போது இந்த வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..!

 பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது ஒரே நாளில் இந்தளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது, 2 வருடத்தில் இல்லாதளவுக்கு மோசமானதாக பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தின் மத்தியில் தாக்கம் இருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியிலேயே, சந்தையானது சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக எஸ் & பி 500 குறியீடானது 4% சரிவினைக் கண்டுள்ளது.

நுகர்வோர் பங்குகள் சரிவு

நுகர்வோர் பங்குகள் சரிவு

குறிப்பாக நுகர்வோர் சார்ந்த பங்குகளின் விலையானது 6% சரிவினைக் கண்டது. டார்கெட் கார்ப்பரேஷன் 1987-க்கு பிறகு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது நுகர்வோர் செலவினைக் குறைப்பதற்காக தேவையினை குறைக்கத் தொடங்கியுள்ளனர். இது நிறுவனங்களின் லாபத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர் சார்ந்த பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக வால்மார்ட், Macy's inc, அமேசான், உள்ளிட்ட பல நிறுவனங்களும் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

 நுகர்வோர் நம்பிக்கையும் சரிவு
 

நுகர்வோர் நம்பிக்கையும் சரிவு

சீனாவில் நிலவி வரும் கடுமையான நிலை, ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை என பலவும் பணவீக்கத்தினை இன்னும் தூண்டும் விதமாகவே உள்ளன. இதற்கிடையில் நிறுவனங்கள் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் நுகர்வோரின் நம்பிக்கையும் பல ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.

 இந்திய சந்தையின் தற்போதைய நிலவரம்?

இந்திய சந்தையின் தற்போதைய நிலவரம்?

இன்று காலை தொடக்கத்தில் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டிருந்த சென்செக்ஸ், தற்போது 985.41 புள்ளிகள் சரிந்து, 53,223.12 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 294.9 புள்ளிகள் அதிகரித்து, 15,945 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US stock markets biggest daily drop in almost 2 year

In the last session the US stock market saw the worst decline in a single day, which is seen as the worst in 2 years. The market has seen a decline amid fears that it may be impacted by inflation.
Story first published: Thursday, May 19, 2022, 11:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X