ஜூலை 14 அன்று தொடங்கவுள்ள சோமேட்டோ ஐபிஓ.. எல்ஐசி முதலீடு செய்யப்போகிறதா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் ஈடுபட்டு வரும் சோமேட்டோ நிறுவனம், ஜூலை 14 அன்று அதன் பொது பங்கு வெளியீட்டினை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

 

பொதுவாகவே ஐபிஓ என்பது சிறுமுதலீட்டாளார்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் சோமேட்டோ பங்கு வெளியீடு என்பது உண்மையில் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பா? ஏனெனில் இது பல தரப்பினர்களும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனரே. குறிப்பாக தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து வரும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

100 பில்லியன் டாலரை தொட்ட 4வது இந்திய குடும்ப நிறுவனம்..!

இப்படி பற்பல கேள்விகளுக்கும் மத்தியில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த முதலீட்டாளரும், இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி சோமேட்டோவில் முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான செய்தியினை பற்றித் தான் பார்க்கவிருக்கின்றோம்.

ஸ்விக்கி தான் போட்டியாளர்

ஸ்விக்கி தான் போட்டியாளர்

வளர்ந்து வரும் ஆன்லைன் டெலிவரி சந்தையில் சோமேட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. செபியில்; பதிவு செய்யப்பட்ட போட்டி நிறுவனங்கள் என்று பெரியதாக சோமேட்டோவுக்கு இல்லையென்றாலும், போட்டியாளராக ஸ்விக்கி நிறுவனம் உள்ளது.

ஐபிஓ-வின் மதிப்பு எவ்வளவு?

ஐபிஓ-வின் மதிப்பு எவ்வளவு?

இந்த ஐபிஓ முலம் அதன் ஆரம்பகால முதலீட்டாளரான Info Edge India Ltd நிறுவனம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், சோமேட்டோ நிறுவனம் புதிய வெளியீடாக 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்காக 6.5 மில்லியன் பங்குகள் ஓதுக்கப்பட்டுள்ளது.

ஐபிஓ எப்போது தொடக்கம்?
 

ஐபிஓ எப்போது தொடக்கம்?

சோமேட்டோ நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தினை மேம்படுத்த நிதியினை திரட்டியுள்ள நிலையில், இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மிகப்பெரிய அளவிலான நிதியினை திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டினை ஜூலை 14 அன்று தொடங்கும் நிலையில், ஜூலை 16 அன்று முடிவடையவுள்ளது. ஜூலை 22 அன்று யாருக்கு எவ்வளவு என்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 23ம் தேதி பங்கு கிடைக்காதவர்களுக்கு ரீபண்ட் கொடுக்கப்படும். ஜூலை 26 அன்று டீமேட் கணக்கிற்கு மாற்றப்படும். ஜூலை 27 அன்று சந்தையில் வர்த்தகத்திற்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த பங்கு வெளியீட்டில் விலை 72 - 76 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளையும், அதற்கு அதிகமாக வேண்டுமெனில் 195ன் மடங்கில் ஏலம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு லாட்டுக்கு 14,820 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 1,92,660 ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். அதாவது அதிகபட்சம் 13 லாட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

பங்கு வெளியீடு - யாருக்கு எவ்வளவு?

பங்கு வெளியீடு - யாருக்கு எவ்வளவு?

இந்த பங்கு வெளியீட்டில் 75% வரை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு வெறும் 10%ம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே மீதமுள்ள 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியானது அதன் வணிக மேம்பாட்டிற்காக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

எதற்காக இந்த நிதி திரட்டல்

எதற்காக இந்த நிதி திரட்டல்

சோமேட்டோ அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பாட்டினை அதிகரிப்பதே இதன் நோக்கமாக உள்ள நிலையில், அதற்கான சலுகைகள், மார்கெட்டிங் செலவுகள், உள்கட்டமைப்பு வசதிகள், டெலிவரி பார்ட்னர்களுக்கான செலவுகள், கால் செண்டர்கள், தொழில் நுட்ப மேம்படுத்தல், அதாவது இந்த நிறுவனத்தின் ஆப்பினை மேம்ப்படுத்தல், இணையதளம், போக்குவரத்து செலவுகள், இன்சூரன்ஸ் கட்டணங்கள், குடோன் செலவினங்களுக்காக பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வேறு என்னென்ன செலவினங்கள்?

வேறு என்னென்ன செலவினங்கள்?

இன் ஆர்கானிக் செலவினங்களில் மற்ற நிறுவனங்களை கையகப்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தினையும், Carthero நிறுவனத்தினையும் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர கணிசமான தொகையை கடனுக்காக ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சோமேட்டோ அறிமுகம்

சோமேட்டோ அறிமுகம்

சோமேட்டோ நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள் இவர்கள் மூன்று பேரையும் இணைப்பதே இவர்களின் முக்கிய பணியாக உள்ளது.

சோமேட்டோவின் பணி என்ன?

சோமேட்டோவின் பணி என்ன?

சோமேட்டோவின் முதன்மை பணி என்பது ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்துவது தான். இது தவிர உணவகங்களில் டைனிங் புக் செய்வதையும், சோமேட்டோவின் தளத்தில் புக் செய்து கொள்ளலாம். அடுத்ததாக உணவகங்களுக்கு தேவையான உயர்தரமான மூலதன பொருட்களை சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆக உணவு டெலிவரி மற்றும் மூலதன பொருட்கள் சப்ளை, புக்கிங் என மூன்று தரப்பில் இருந்தும் வருமானம் உண்டு.

 புரோமோட்டர்கள் யார்?

புரோமோட்டர்கள் யார்?

இந்த நிறுவனம் புரபஷனலி மேனேஜ்டு நிறுவனம் என்பதால் சொல்லும்படியான புரோமோட்டர் யாரும் கிடையாது.

பிரின்சிபில் ஷேர் ஹோல்டர்ஸ் :இன்போ எட்ஜ் நிறுவனம் 18.55% பங்கினை வைத்துள்ளது. இதே ஆலிபே மற்றும் ஆண்ட் குழுமம் இணைந்து 16.53% பங்குகளை வைத்துள்ளதாக அதன் இணையதளம் மூலம் அறிய முடிகின்றது.

நிறுவனத்திற்குள்ள பிரச்சனைகள்

நிறுவனத்திற்குள்ள பிரச்சனைகள்

சோமேட்டோ நிறுவனம் வியாபாரத்தினை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது பல சலுகைகளை அளித்து வருகின்றது. இது குறித்து ஹோட்டல்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ஹோட்டல் சங்கத்தினருடன் பல முறை இது குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றது. இது தவிர கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து வருவதும் கவனிக்க கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

சாதகமான விஷயங்கள்

சாதகமான விஷயங்கள்

எனினும் கடன் பெரியளவில் இல்லை என்று கூறியிருப்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதோடு சர்வதேச அளவில் பல நாடுகளில் இதன் சேவையை விரிவுபடுத்தி வருகின்றது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவை என்பதும் இந்த நிறுவனத்திற்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கியிடையில் தான் எல்ஐசியின் முதலீட்டு கமிட்டியானது இது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியிருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato IPO; LIC may invest in Rs.9,375 crore IPO; check details

Zomato IPO latest updates.. Zomato IPO; LIC may invest in Rs.9,375 crore IPO; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X