சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெறுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வணிகத்தைத் தொடர்ந்து நடத்து அல்லது விரிவாக்கம் செய்யப் பணம் வேண்டும் ஆனால் அது கடினமான வேலை என்று நினைப்பவர்களா நீங்கள்? இதோ மோடி அறிமுகம் செய்து இருக்கும் வங்கி கிளைகளுக்குச் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 59 நிமிடத்தில் கடன் பெற கூடிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

வணிகர்களால் இந்தக் கடன் திட்டத்திற்கு www.psbloansin59minutes.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க முடியும். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். கடனுக்கு வட்டி 8 சதவீதம், ஆனால் சொத்துக்கள் ஏதும் அடைமானம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான திட்டத்திற்கான கடன் உத்தரவாத நிதி நிதியம் கடனை வழங்கும்.

முன்பு கடனுக்கு விண்ணப்பித்து 20 முதல் 25 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையினை மாற்றி 59 நிமிடத்தில் கடன் பெறக் கூடிய திட்டமாக அறிவித்துள்ளனர். எனவே 59 நிமிடத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எப்படி 1 கோடி ரூபாய் கடன் பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

பதிவு செய்தல்

பதிவு செய்தல்

முதலில் www.psbloansin59minutes.com/signup என்ற இணைப்பிற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். அதற்கு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து ஒரு முறை கடவுச்சொல்லை பெற வேண்டும்.

ஜிஎஸ்டி பதில் அளித்தல்

ஜிஎஸ்டி பதில் அளித்தல்

பின்னர் உங்கள் வணிகத்தினை ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்துள்ளீர்களா, ஜிஎஸ்டி தாக்கல் செய்கிறீர்களா, கடன் வாங்கி விட்டு அதனைச் செலுத்தாமல் உள்ளீர்களா போன்று 4 எளியக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.

 ஜிஎஸ்டி விவரங்களை அளித்தல்

ஜிஎஸ்டி விவரங்களை அளித்தல்

ஜிஎஸ்டி எண், ஜிஎஸ்டி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

 வரி விவரங்களைச் சமர்ப்பித்தல்
 

வரி விவரங்களைச் சமர்ப்பித்தல்

XML வடிவத்தில் அல்லது வரி இணையதள விவரங்களை அளித்துப் பான் எண் மற்றும் நிறுவனத்தினைத் தொடங்கிய தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

பின்னர் வங்கி கணக்கு அறிக்கை அல்லது இணையதள வங்கி சேவை விவரங்களை அளிக்க வேண்டும்.

 நிறுவன உரிமையாளர்கள்

நிறுவன உரிமையாளர்கள்

நிறுவனத்தின் இயக்குநர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் விவரங்கள்

கடன் விவரங்கள்

தற்போது உங்கள் வணிகத்தின் விவரங்கள், கடனின் தேவை, முந்தைய கடன் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

வங்கி தேர்வு செய்தல்

வங்கி தேர்வு செய்தல்

எந்த வங்கியில் இருந்து கடன் வேண்டும் என்ற விவரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது 12-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூலம் கடனை பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 கட்டணம் செலுத்துதல்

கட்டணம் செலுத்துதல்

கடன் விண்ணப்ப சேவைக்கான கட்டணமாக 1000 ரூபாய் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

அனுமதி கடிதம்

அனுமதி கடிதம்

கடைசிப் படியான இதில் உங்கள் கடன் அனுமதிக்கான கடிதத்தினைப் பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பு

குறிப்பு

கடன் பெற www.psbloansin59minutes.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கச் செல்லும் முன் ஜிஎஸ்டி எண், வருமான வரி தாக்கல் விவரங்கள் அல்லது பான் எண், வங்கி கணக்கு அறிக்கை, வணிக இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதே நேரம் வங்கிகள் கடன் தொகையினை அளிக்கும் முன்பு கூடுதல் ஆவணங்களைக் கேட்கவும் வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: கடன் easy steps loan
English summary

Easy Steps To Rs 1 crore loan in 59 minutes for MSMEs

Easy Steps To Rs 1 crore loan in 59 minutes for MSMEs
Story first published: Saturday, November 3, 2018, 17:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X