நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாகவே மேடு இன் இந்தியா, இந்திய உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தல் என்பது பற்றிய விழப்புணர்கள் மிக அதிகரித்து வருகின்றன.

 

அதிலும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா வீரர்கள் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த பின்னர், இது சற்றே அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த @75 உச்சி மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி MSME க்களை மேம்படுத்துவது குறித்து பேசியுள்ளார்.

இறக்குமதி வரியினை அதிகரிக்க வேண்டும்

இறக்குமதி வரியினை அதிகரிக்க வேண்டும்

அவர் அந்த மாநாட்டில் உரையாற்றிய போது, இந்தியா சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தியினை மேம்படுத்த, சில பொருட்களுக்கான இறக்குமதி வரியினை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க உதவும் என்றும் கறியுள்ளார். எனினும் அது எந்தெந்த பொருட்கள் என்று கூறவில்லை.

உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும்

உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும்

உற்பத்தியாளர்கள் அதிகளவிலான பொருட்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இறக்குமதி வரி அதிகரிப்பானது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். எப்போது பொருட்களின் உற்பத்தியானது அதிகமாக உள்ளதோ? அப்போது விலைப்போர் ஏற்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
 

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சில பொருட்களுக்கு இறக்குமதி வரியினை அரசு அதிகரித்தது. குறிப்பாக அகர்பத்திகளுக்கு 10%ல் இருந்து, 25% ஆக அதிகரித்தது. இது உள்ளூர் அகர்பத்தி உற்பத்தியாளார்களை ஊக்கப்படுத்தியது. அது மட்டும் அல்ல அரசின் இந்த நடவடிக்கையினால் வேலை வாய்ப்பும் 25 - 30 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்

குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்

சீனாவில் 10 துறை சார்ந்த வணிகம் மட்டுமே அந்த நாட்டின் 70% பங்களிப்பை செலுத்தி வருகின்றன. இந்தியா குறிப்பிட்ட அந்த 10 துறைகளில் தான் சீனாவினை நம்பியுள்ளது. ஆக அதனை கண்டறிந்து அந்த துறையில் உற்பத்தியினை பெருக்க வேண்டும். தர்சார்பு திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே, அதனை நாம் உறுதி செய்ய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அவசர தேவை

அவசர தேவை

ஆக இவ்வாறு இத்துறை மேம்பாட்டின் மூலம் புதிய ஏற்றுமதிகளையும் இந்தியாவில் அதிகரிக்க முடியும். அதோடு இது ஏராளமான துணைத் தொழில்களையும் ஊக்குவிக்க வழிவகுக்கும். மேலும் நாட்டின் 115 அடையாளம் காணப்பட்ட சிறப்பு மாவட்டங்களில் குறு சிறு நடுத்தர தொழில் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது.

இதில் கவனம் செலுத்த வேண்டும்

இதில் கவனம் செலுத்த வேண்டும்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் பங்களிப்பு தற்போது மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டால் இத்துறையில் வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் மேம்படுத்தலாம் என்றும் கட்கரி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

உண்மையில் உள் நாட்டு உற்பத்தியினை ஊக்குவித்தாலே இந்தியா சீனாவுக்கு நிகராக ஏற்றுமதியினை பெருக்க முடியும். அதற்கு முதலில் உள் நாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதே சிறந்த வழி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nitin gadkari said need to increase import duty to support Indian MSMEs

MSME update.. Nitin gadkari said need to increase import duty to support Indian MSMEs
Story first published: Sunday, August 9, 2020, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X