வாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: பொதுவாக நம்மூரில் சிறு தொழில் என்றாலே அதிகம் பேர் தேர்தெடுப்பது உணவு மற்றும் அதை சார்ந்த தொழில்களையே. அது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இப்படி தான் போலும்.

அதிலும் கோடைக்காலங்களில் ஆங்காங்கே முளைக்கும் ஜூஸ் செண்டர்களும், அங்கு குவியும் மக்களையும் நாம் பார்க்க முடியும். கோடைகாலங்களில் மட்டும் கடைகளை நிறுவி காசு பார்க்கும், கடைகளை விட வருடம் முழுதும் வேலை பார்க்கும் கடைகள் மிகக் குறைவே.

ஆனால் கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, நம்ம கோயமுத்தூர் பிரியா ஜூஸ் செண்டரில் அப்படியொரு கூட்டம். தரம், சுவை, இவையெல்லாவற்றையும் விட விலை என அனைத்திலும் கலக்கும் இந்த ஜூஸ் செண்டரை பற்றித் தான் இன்று நமது சிறுதொழிலில் பார்க்க போகிறோம்.

அப்படி என்ன பேமஸ்?
 

அப்படி என்ன பேமஸ்?

இது இன்று நேற்றல்ல, கடந்த 15 வருடங்களாக இங்கே தான் இருக்கிறது என்கிறார் இந்தக் கடையின் உரிமையாளர் நசீர். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக நமது கோவை, டவுன் ஹாலில் பிரியா ஜூஸ் அன்ட் கேக்ஸ் கடையை நடத்தி வருகிறார். சரி வெறும் ஜூஸ் செண்டர் தானே இங்கே, அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? இருக்குங்க.. இங்கு தரப்படும் ஜூஸ் வகைகளே சர்வதேச தரத்தில் இருக்கிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில் விலை மிக மிக குறைவு தான். அதனால் தானோ என்னவோ இந்தக் கடையில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இங்கு ஜூஸ் மட்டும் ஸ்பெஷல் அல்ல

இங்கு ஜூஸ் மட்டும் ஸ்பெஷல் அல்ல

இங்கு பிரஸ் ஜூஸ்கள் மிகப் பிரபலம் என்றால், இங்கு தரப்படும் அனைத்து ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளும், மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது விலை குறைவு தானாம். ஆனால் தரம் மற்றும் சுவை மிக அபராமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர். அதிலும் மிக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில், பீட்சா, பர்கர், பலூடா, ஷேக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை உணவுகளும் மிகப் பிரபலம். ஜூஸ்களின் விலை மட்டும் அல்ல இது போன்ற பீட்சாகளின் விலையும், மிகக் குறைவு என்கிறார்கள். அதிலும் இங்கு தரப்படும் திராட்சை ஜூஸ் மிக மிக பேமஸ் என்று கூறுகிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள்.

நிறைந்த தரம், ருசி!

நிறைந்த தரம், ருசி!

பார்த்தாலே எச்சில் ஊறும் இந்த வகை உணவுகளுக்கு கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அடிமை என்றால் அது பொய்யல்ல. அதிலும் அவர்களுக்கு ஏற்றவாறு விலையும் குறைவாக இருப்பதால், கல்லூரி மாணவர்களின் சொர்க்கம் என்றே இந்தக் கடையை கூறலாம். அதிலும் வாராக் கடைசி, விடுமுறை நாட்களில் டவுன் ஹாலுக்கு ஷாப்பிங் வரும் மாணவர்களோ பெண்களோ இங்கு வராமல் செல்வதில்லையாம். தவறாமல் இங்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம். இது போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் என்றும் கூறுகிறார் நசீர்.

விலை குறைவு சாத்தியம்?
 

விலை குறைவு சாத்தியம்?

பொதுவாகவே பழ வகைகளின் விலை விண்ணைத் தொடும். இதனால் மற்ற இடங்களில் பிரஸ் ஜூஸ் வகைகளின் விலையும் அதிகமாகவே இருக்கும். அதிலும் பலூடா வகைகள், புரூட் சாலட் வகைகள், ஐஸ் க்ரீம் மற்றும் ஐஸ் க்ரீம் வித் புரூட் சாலட் வகைகள் என கொடுக்கும் போது இன்னும் விலை அதிகமாக இருக்கும். சாதரணமாக இது போன்ற வகைகள் வெளியில் விலை அதிகமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் நாங்கள் விலை குறைவாக கொடுத்தாலும் எங்களுக்கு கட்டுப்படியாகிறது, என்ன லாபம் குறைவு, இருப்பினும் லாபம் தான் என்று கூறுகிறார் இக்கடையின் உரிமையாளர்.

வருமானம் எந்த அளவுக்கு?

வருமானம் எந்த அளவுக்கு?

பொதுவாக எங்களுக்கு விற்பனை அமோகமாக இருக்கும், கடைக்கு ஆட்கள் எந்த நேரமும் வருவார்கள் என்று இங்குள்ளவர்கள் கூறுவார்கள், ஆனால் எங்களுக்கு மட்டுமே தெரியும் எங்களது தொழில் இரகசியம் என்னவென்று. பொதுவாக ஒரு ஜூஸ் விலை 40 - 50 என்றால் மக்கள் விரும்புவார்கள். ஆனால் இதே 100 ரூபாய் என்றால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது. இதனால் 10 பேர் வரும் இடத்தில் 1 - 2 பேர் தான் வருவார்கள். இதே 40 ரூபாய் என்ற போது 5 பேர் வந்தாலும் கூட எங்களுக்கு போதுமான லாபம் கிடைக்கும் என்கிறார்.

லாபம் பெரிதாக இல்லை?

லாபம் பெரிதாக இல்லை?

எங்களுக்கு பெரிதாக இலாபம் ஒன்றும் இல்லை. எனினும் இலாபமே இல்லை நஷ்டத்தில் தான் போகிறது என்று நான் கூறவில்லை. போதுமான அளவு வருமானம் இருக்கிறது. ஆட்கள் சம்பளம், கடை வாடகை, மூலதன பொருட்கள் போக சுமாரான வருமானம் உள்ளது. உதராணத்திற்கு 10,000 ரூபாய் வருமானம் என்றால் வாடகை, சம்பளம் மற்ற செலவினங்கள் போக 2000 ரூபாய் வரை நிற்கும். பொதுவாக நான் ஒரு வேலைக்கு சென்றால் கூட இதை விட பல மடங்கு சம்பாதிக்க முடியும். ஆனால் அதில் எல்லாம் இல்லாத திருப்தி எனக்கு எனது தொழில் உண்டு என்கிறார் நசீர்.

மற்றவர்களாக இருந்தால் பல கிளைகள் திறந்திருப்பார்கள்?

மற்றவர்களாக இருந்தால் பல கிளைகள் திறந்திருப்பார்கள்?

பொதுவாக என்னிடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், இன்னும் பல கிளைகளை திறந்திருப்பார்கள். ஆனால் நான் இதுவரை இன்னும் வேறு எந்தக் கிளையும் திறக்கவில்லை. எனது இந்த ஜூஸ் செண்டரையே இன்னும் விரிவாக்கம் செய்து, இன்னும் பல வகையான உணவுகளை கொடுக்க நினைக்கிறேன் என்றும் கூறுகிறார்.

தொழிலில் வித்தியாசமான முயற்சி?

தொழிலில் வித்தியாசமான முயற்சி?

பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே கொடுக்க முடிந்த சுவையை, குறைந்த விலைக்கு கொடுக்க முடியும், அதிலும் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு, விலை குறைவாக இருந்தாலும், மிக ருசியான பதார்த்தங்களை கொடுத்து வரும் நசீரின் இந்த முயற்சிக்கு ஒரு சல்யூட் அடித்தே ஆக வேண்டும். இதுவும் ஒரு நல்ல முயற்சியே.... தொடரட்டும் இந்த வர்த்தக யுத்தம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

priya juice shop has been a most satisfying and filling juices and shakes in town.

priya juice shop has been a most satisfying and filling juices and shakes in town.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X