வாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பானது மிகப்பெரிய அளவில் இருப்பதால், மத்திய மாநில அரசுகளானது தொடர்ந்து பல அதிரடியான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் எடுத்து வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது இந்த எம் எஸ் எம் இக்களை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஈகாமர்ஸ் போர்டலை உருவாக்கி வருவதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை!

பாரத் கிராஃப்ட் என்று அழைக்கப்படும் இந்த ஈ காமர்ஸ் போர்டல், எஸ்பியும் அரசும் சேர்ந்து கூட்டாக நடத்த உள்ளதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

இது தற்போது செயலபாட்டில் உள்ளது. மேலும் இதனை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். இந்த தளத்திற்கான மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றும் சிஐஐ கூறியுள்ளது.

எம் எஸ் எம் இயின் தலைவர் நிதி கட்கரி ஒரு முறை இந்த பாரத் கிராஃப்ட் பற்றி கூறியிருந்த நிலையில், தற்போது இது பற்றி எஸ்பிஐயும் அறிவித்துள்ளது. இதற்காக நிறைய கூறுகள் இணைக்கப்பட வேண்டி உள்ளது. நிச்சயம் நாங்கள் அதனை செய்வோம் என்றும் குமார் கூறியுள்ளார்.

எனினும் அதன் வரையறை என்ன? அது செயல்பட வேண்டிய காலவரிசையையும் அவர் விரிவாகக் கூறவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அலிபாபாவின் வழியில் பாரத் கிராஃப்ட் என்ற ஈ காமர்ஸ் போர்டலை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு டர்ன் ஓவர் செய்யப்படலாம். ஆக இது எம் எஸ் எம் இக்களூக்கு பெரிய அளவில் லாபம் தரலாம். இது நல்ல பயனுள்ள ஒரு விஷயமாகும்.

 

நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியிலும், அது உருவாக்கிய வேலைவாய்ப்புகளும் எம் எஸ் எம் இக்களின் பங்கு 29 சதவீதம் மற்றும் 11 கோடி மக்களாக உள்ளது. இது அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதமாகவும், 15 கோடி மக்களாகவும் எதிர்பார்க்கிறது.

நாட்டின் MSME பிரிவு என்பது பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவு என்பதை வலியுறுத்திய குமார், இந்த கடிமான காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்த துறையின் வரையறைகளை மாற்றுவது உள்ளீட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI chairman rajnish kumar said SBI working on setting up e-commerce portal for MSMEs

State bank of India chairman rajnish kumar said SBI working on setting e-commerce portal for MSMEs in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X