சுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Salem RR Biryani Unavagam | Yummy & Tasty

சேலம் : பொதுவாகவே பிரியாணி என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் என்னதான் நாம் வீட்டில் பிரியாணி சாப்பிட்டாலும், ஹோட்டல்களில் சென்று, அதுவும் வீட்டுச் சுவையில் சாப்பிடுவது அப்படி ஒரு சுவையை கொடுக்கும்.

 

பொதுவாகவே பிரியாணி என்றாலே அதிக எண்ணெய்யும் காரமும் இருக்கும் என்பார்கள். எனினும் தற்போதைய காலத்தில் ஊருக்கு ஊர் ஒரு வித ருசியில் ஒவ்வொரு விதமாக செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த காலத்தில் ஒரே வித சுவையுடன் இன்று பல ஊர்களில், பல இடங்களில், ஒரே விதமான ருசியுடன் தருகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் காணப்போவது சேலம் ஆர்.ஆர் பிரியாணியை பற்றித் தான்.

படிப்பதற்கு வசதி இல்லை

படிப்பதற்கு வசதி இல்லை

குறிப்பாக இந்த சிறு வர்த்தகம் சார்பில் ஏன் நாம் வழக்கம் போல் உணவகங்களை தேர்தெடுக்கிறோம் எனில், குறுகிய காலத்தில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் காண்பது தான். அதற்கு கண் முன்னே பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், தன்னுடைய சிறிய வயதிலேயே தாயை இழந்த தமிழ்செல்வன், தனது பள்ளிப்படிப்பை, 4ம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல், படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, டீ டம்ளர் கழுவ ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். இப்படியாக ஆரம்பித்த இவரின் வாழக்கை, வெறும் 8,500 சேர்ப்பதற்கு 8 வருடம் ஆகியது என்கிறார். இன்று தன்னுடைய ஹோட்டலில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மாத சம்பளம் கூட இதை விட அதிக வாங்குகிறார் என்றால் பாருங்களேன். இப்படியாக தள்ளுவண்டியில் ஆரம்பித்த கடைதான். இன்று அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரண வளர்ச்சியல்ல. அசுர வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.

ஆர்.ஆர் பிரியாணிக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு
 

ஆர்.ஆர் பிரியாணிக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு

பொதுவாக பிரியாணி என்றாலே இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். அதிலும் ஆர்.ஆர் பிரியாணிக்கென்றே தனி மதிப்பு உண்டு. ஏனெனில் ருசியும் தரமும் அப்படி என்று கூறுகிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள். தற்போதைய காலத்தில் 50 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. எனினும் ருசியான தரமான பிரியாணி கிடைக்கிறதா என்றால், அதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் ஆர்.ஆர்.பிரியாணியில் பதில் கிடைக்கும் என்று கூறுகிறார் இக்கடையின் நிறுவனர் தமிழ்செல்வன் கூறுகிறார்.

ஆர்.ஆரின் பிரமாண்ட வளர்ச்சி எப்படி?

ஆர்.ஆரின் பிரமாண்ட வளர்ச்சி எப்படி?

சென்னையில் ஒரு தள்ளு வண்டியில் ஆரம்பித்த இந்த கடை, இன்று 25 ஹோட்டல்களை நடத்தி வரும் அண்ணன் தமிழ்செல்வன் பிறந்தது சேலம், எடப்பாடியில் என்றாலும் வளர்ந்தாலும், சென்னை தான். சென்னையில் முதன் முதலாக தள்ளுவண்டியிலேயே ஆரம்பித்த இந்தக் கடை, தற்போது மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

என்ன ஸ்பெஷல்?

என்ன ஸ்பெஷல்?

ஆர்.ஆர்.பிரியாணியை பொறுத்த வரை, மற்ற பிரியாணியை சாப்பிட்டவுடன் மந்தமாக இல்லாமல், எளிதில் ஜூரணமாகக் கூடிய பிரியாணி தான், இந்த ஆர்.ஆர் பிரியாணி தான். பிரியாணி என்றாலே அந்த பிசுப்பிசுப்பான எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும். இந்த பிரியாணியில் உபயோகிக்க கூடிய மசாலா வகைகளும் மிகப் பேமஸ் என்றால் அது பொய்யல்ல.

என்னென்ன உணவு வகைகள்?

என்னென்ன உணவு வகைகள்?

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியானி, தந்தூரி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மற்றும் சைனீஷ் ஐயிட்டங்களும் கிடைக்கும். இது தவிர தந்தூரி ஐட்டங்களான பட்டர் நான், நான், கார்லிக் நான், ஜிஞ்சர் நான், தந்தூரி பரோட்டா, இது தவிர நாட்டுக் கோழி பிரியாணி, பிரான் பிரியாணி, பிஷ் பிரியாணி, இது தவிர வெஜ் மற்றும் நான் வெஜ் சூப் வகைகளும் கிடைக்கும். இங்கு சைவ உணவுகளும் கிடைத்தாலும், அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு இது சரியான உணவகம் என்றே கூறலாம்.

வாடிக்கையாளர்களே எங்கள் சொத்து

வாடிக்கையாளர்களே எங்கள் சொத்து

இது குறித்து கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவாறு நாம் உணவுகளை தயாரித்து கொடுக்கையில், அவர்கள் எங்களை தேடி வருகிறார்கள். அதோடு அளவு என்பது முக்கியம். ஏனெனில் சில இடங்களில் ஒரு பிரியாணி சாப்பிட்டால், வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு இருக்காது. ஆனால் இங்கு அது தான் பிரபலமே. ஆமாங்க.. இரண்டு பிரியாணி வாங்கினால் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உணவு தொழில் மட்டும் அல்ல

உணவு தொழில் மட்டும் அல்ல

எனது உயர்வுக்கு எனது தன்னம்பிக்கை மட்டுமே காரணம் என்றும் இவர், ஆரம்பத்தில், 8000 முதலீடில் சிறு கடை ஆரம்பித்த இவர், இன்று பல கோடிக்கு அதிபர். என் தொழில் மேல் நான் கொண்ட பயமே எனது வெற்றிக்கு காரணம் என்றும் பெருமையாக கூறுகிறார். உணவகம் மட்டும் அல்லாது, சினிமா துறையிலும் இருக்கிறார்.

அதிகளவில் போட்டி?

அதிகளவில் போட்டி?

பொதுவாக எந்த தொழிலும் போட்டி அதிகம் என்றாலும், நமது பொருள் தரமாக இருந்தால் நமக்கென வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நம்மை விட்டு செல்ல மாட்டார்கள். அந்த வகையில் அதை நாங்கள் பூர்த்தி செய்ததால் தான், இன்றளவிலும் எங்களது பிராண்டு முன்னணியில் இருக்கிறது என்றும் கூறுகிறார். மேலும் கடுமையான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்றும் தமிழ்செல்வன் கூறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Very tasty Briyani and yummy side dish in salem

Very tasty Briyani and yummy side dish in salem
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X