ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்.. மறந்துடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜனவரி 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது குறிப்பாகப் பிஎப் கணக்கு, போஸ்ட் ஆபீஸ் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி வரியில் 4 முக்கிய மாற்றங்கள் எனச் சாமானிய மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் பல விஷயங்களை நடைமுறைக்கு வருகிறது.

 

வெறும் 2 ரூபாயில் ரூ.36,000 பென்ஷன்.. மோடி அரசின் சிறப்பான திட்டம்..!

ஏடிஎம் பணப் பரிமாற்ற கட்டணம்

ஏடிஎம் பணப் பரிமாற்ற கட்டணம்

ஜனவரி 1 முதல் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு 20 ரூபாய் + வரியாக இருந்த கட்டணம் 21 ரூபாய் + வரியாக உயர்த்தப்பட உள்ளது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இனி ஒவ்வொரு ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கும் கட்டணத்தை 1 ரூபாய் அதிகரித்து 21 ரூபாய் + வரியாக உயர்த்தப்பட உள்ளது.

இது இலவச ஏடிஎம் பயன்பாட்டுக்குத் தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

 UAN - ஆதார் இணைப்பு

UAN - ஆதார் இணைப்பு

உங்கள் UAN உடன் ஆதார் இணைக்கவில்லை எனில் 01.01.2022 முதல் உங்கள் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் உங்கள் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டய தொகையை டெபாசிட் செய்ய முடியாமல் போகலாம். எனவே டிசம்பர் 31க்குள் UAN உடன் ஆதார்-ஐ இணைத்திடுங்கள்.

 ஸ்விக்கி, சோமேட்டோ
 

ஸ்விக்கி, சோமேட்டோ

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் இதுநாள் வரையில் உணவகங்களில் இருந்து வசூலித்து வந்த 5 சதவீத வரியை தற்போது வாடிக்கையாளர்களின் மொத்த உணவுக்கான விலையில் இருந்து 5 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதேபோல் டெலிவரி சார்ஜ், டிப்ஸ், பேக்கிங் சார்ஜ் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க உள்ளது உணவு டெலிவரி நிறுவனங்கள்.

 ஓலா, உபர்

ஓலா, உபர்

ஓலா, உபர் போன்ற அனைத்து ஆன்லைன் தளத்தில் புக் செய்யப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேவைக்கு இதுநாள் வரையில் எவ்விதமான வரியும் விதிக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்துள்ளது.

 வங்கி லாக்கர் சேவை

வங்கி லாக்கர் சேவை

வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள் திருட்டு அல்லது வங்கி ஊழியர்களின் மோசடி காரணமாக மக்கள் பொருட்களை இழந்தால் அதற்கான பொறுப்பை வங்கி நிர்வாகம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு இழப்பீடாக வங்கி லாக்கரின் ஓராண்டு வாடகையின் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும் வங்கி லாக்கரில் இருக்கும் பொருட்களுக்குப் பொருட்களுக்கு இன்சூரன்ஸ் அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

வங்கி லாக்கர் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

 ஆடைகள்

ஆடைகள்

ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படி ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு ஆடையின் விற்பனை விலை 1000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அதற்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது, இதற்கு முன்பு இதன் அளவு வெறும் 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 காலணிகள்

காலணிகள்

மேலும் 1000 ரூபாய்க்கு குறைவான காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஆடை மற்றும் காலணி வர்த்தகம் நடுத்தர மக்கள் மத்தியில் குறைய வாய்ப்பு உள்ளது.

 தனிநபர் வருமான வரி தாக்கல்

தனிநபர் வருமான வரி தாக்கல்

2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31. செலுத்தா பட்சத்தில் பல சலுகைகளை இழப்பது மட்டும் அல்லாமல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும், உதாரணமாக உங்களின் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தின் அளவு 5,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் 5000 ரூபாயும், 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 1000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

 இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவிப்பின் படி ஜனவரி 1 முதல் பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் 4 முறை இலவசமாகக் கேஷ் வித்டிரா செய்துகொள்ளலாம், அதன் பின்பு ஒவ்வொரு முறையும் தத்தம் தொகையில் 0.50 சதவீதம் அல்லது குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூலிக்கப்படும். மேலும் பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் செய்யப்பட்டும் டெபாசிட் முற்றிலும் இலவசம் என அறிவித்துள்ளது.

பிற சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 25000 ரூபாய் வரையில் வித்டிரா, 10000 ரூபாய் வரையில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகச் சென்றால் 0.50 சதவீதம் அல்லது குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூலிக்கப்படும்.

 

 ஈநாமினேஷன்

ஈநாமினேஷன்

EPFO அமைப்பு டிசம்பர் 31க்குள் அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஈ-நாமினேஷன் செய்யப்பட்ட வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், ஈபிஎப்ஓ அமைப்பு தனது டிவிட்டரில் டிசம்பர் 31க்கு பின்பும் ஈ-நாமினேஷன் செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆனால் இன்றே செய்துவிடுங்கள் என்ற அன்பு கட்டளையும் விடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 finance related changes will effect from January 1, 2022 - full details

10 finance related changes will effect from January 1, 2022 - full details ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் 9 முக்கிய மாற்றங்கள்.. மறக்காமல் இதைச் செய்திடுங்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X