11 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து.. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று ரீடைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்த ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவை பெற்றது.

 

அமேசான் சில ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்து வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீறி பியூச்சர் குரூப் வர்த்தகத்தை அதன் தலைவர் கிஷோர் பியானி, தனது சக போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்து ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாக வழக்குத் தொடுத்துள்ளது.

தோல்வி அடையுமா..?

தோல்வி அடையுமா..?

ரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பைத் தொடர்ந்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவு பெறுமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

ரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் குறித்தும், இந்த ஒப்பந்தம் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்தும் டெல்லியைச் சேர்ந்த ஒரு என்ஜிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் மத்தியில் செய்யப்பட்ட 24,713 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் மட்டும் தோல்வியில் முடிவடைந்தால் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், டீலர் என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 11 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

பியூச்சர் குரூப் பிராண்டுகள்
 

பியூச்சர் குரூப் பிராண்டுகள்

பியூச்சர் குரூப் கீழ் இருக்கும் பிக் பஜார், ஈஸி டே, நீல்கிரீஸ், சென்டர்ல், பிராண்ட் பேக்டரி எனப் பல பிராண்டுகளின் கீழ் இருக்கும் நேரடி ஊழியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், டீலர் எனப் பஸ தரப்பினர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

கடன் சுமை

கடன் சுமை

பியூச்சர் குரூப் ஏற்கனவே அதீத கடன் சுமையின் காரணமாகத் தான் தனது வர்த்தகத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டது. சில வாரங்களுக்கு முன்பு கூடப் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காகப் பணிகளையும், கடனை மறுசீரமைப்பு செய்யும் பணிகளைத் துவங்கியது.

அமேசானுக்கு வாய்ப்பு

அமேசானுக்கு வாய்ப்பு

இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் பெரிய அளவிலான நெருக்கடி உருவாகும், இதேவேளையில் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் நிறுவனத்தையும் வர்த்தகத்தையும் மொத்தமாகக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

2000 ரீடைல் கடைகள்

2000 ரீடைல் கடைகள்

பியூச்சர் குரூப் இந்தியாவில் சுமார் 450 நகரங்களில் சுமார் 2000க்கு அதிகமாக ரீடைல் கடைகள் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவன வர்த்தகத்திற்குப் பொருட்களை வழங்கும் பணியில் சுமார் 6000 நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் இந்த வர்த்தகக் கட்டமைப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 11 லட்சம் பேர் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 lakh people may lose jobs if Future-Reliance deal fails

11 lakh people may lose jobs if Future-Reliance deal fails
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X