அரசியல் முதல் டெக் நிறுவனங்கள் வரை.. அசத்தும் ஐஐடி மாணவர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொழில் நுட்ப கழகம்(IIT) மிகவும் புகழ்பெற்ற, மக்களின் நம்பிக்கையான கல்வி அமைப்பாகும். இன்று உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும், தலைமை வகிப்பது இந்திய ஐஐடி மாணவர்களே உதாரணமாகும்.

 

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐஐடி-யில் படித்து விட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 11 பேரை பற்றித் தான்.

ஐஐடி கான்பூருக்கு ரூ.100 கோடி வாரி வழங்கிய ராகேஷ் கங்வால்.. தாரள மனசு தான்..!

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

தற்போதைய டெல்லியின் முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால், ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் ஆகஸ்ட் 16, 1968ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள சிவானியில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த கெஜ்ரிவால் ஐஐடி காரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இன்று டெல்லி மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படும் ஆம் ஆத்மியின் தலைவராவர்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

இரண்டாவதாக நாம் இன்று பார்க்கவிருப்பவர் ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர். ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவரான ராஜன் படிக்கும் காலத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்தவர். தங்க பதக்கத்தினையும் வென்றவர். இவர் ரிசர்வ் வங்கியின் கவனர்னராக இருந்தபோது பல்வேறு முக்கிய நடவடிக்கையையும் எடுத்தவர்.

வினோத் கோஸ்லா
 

வினோத் கோஸ்லா

டெல்லி ஐஐடியில் படித்தவரான கோஸ்லா, சிறந்த தொழில் முனைவோராகவும், மிகப்பெரிய முதலீட்டாளரும் ஆவார்,. இவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மற்றும் கோஸ்லா வென்ச்சர்ஸின் நிறுவனரும் ஆக இருப்பவர். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஆகும். டெல்லி ஐஐடியில் எலக்ட் ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவரான இவர், பிடெக் முடித்தவர். 2014ல் போர்ப்ஸ் அறிக்கையின் படி 400 பணக்காரர்கள் பட்டியலில் கோஸ்லாவும் ஒருவர்.

தீபிந்தர் கோயல்

தீபிந்தர் கோயல்

இந்தியாவின் மிகப்பிரபலமான ஸ்டார்ட் அப்களில் ஒன்று சோமேட்டோ. இதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல்., கடந்த 2005ம் ஆண்டில் கணிதம் மற்றும் கம்யூட்டிங் படித்தவர். இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சோமேட்டோ சமீபத்தில் தான் பங்கு சந்தையில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

சேத்தன் பகத்

சேத்தன் பகத்

இந்தியாவில் மிகப்பெரியவில் விற்பனை ஆகி வரும் என்னுடைய வாழ்வில் 3 தவறுகள் என்ற (3 Mistakes of My Life), 5 பாயிண்ட் சம் ஒன் ( 5 point Someone), ஹால்ப் கேர்ள் பிரண்ட் (Half Girlfriend) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவரான இவர், ஐஐஎம் அகமதாபாத்தில் வணிக நிர்வாக பட்டிப்படிப்பும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் ஆர்  நாரயண மூர்த்தி

என் ஆர் நாரயண மூர்த்தி

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மூர்த்தி, 1969ல் ஐஐடி கான்பூரில் முதுகலை பட்டம் படித்தவர். கடந்த 2008ல் இந்திய அரசின் பத்ம விபூசன் விருதை பெற்றவராவர். கடந்த 2012ல் ஃபார்சூன் இதழில் நமது காலத்தின் 12 சிறந்த தொழில் முனைவோர் என்ற பட்டியலிலும் இடம் பெற்றவர்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

உலகமே அறியப்படும் சுந்தர் பிச்சைக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை எனலாம். கூகுள் மற்றும் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் முழுவதும் பேர் போனவர். இவர் ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியல் படித்தவர். ஆகஸ்ட் 10,2015ம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாகவும் ஆனார். இன்று வரையில் கூகுளில் இவரின் பங்கானது மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது.

சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்

டெல்லி ஐஐடியில் படித்தவரான சச்சின் பன்சால், பிளிப்கார்டின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாவார். கடந்த 2005ம் ஆண்டு டெல்லி ஐஐடியில் படித்தவர். இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டில் இவரின் பங்கு முக்கியமானது.

பவிஷ் அகர்வால்

பவிஷ் அகர்வால்

பவிஷ் அகர்வால் நிச்சயம் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாதுஎனலாம். ஏனெனில் மிகப் பிரபலமான தொழிலதிபரும், ஓலா கேப்ஸ்-ன் இணை நிறுவனரான பவிஷ், ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியல் படித்தவர். 2018ல் பவிஷ் அகர்வால் டைம் இதழில் 100 சிறந்த செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக இருந்தவர்.

ஜிஜேந்திர குமார்

ஜிஜேந்திர குமார்

இவர் ஒரு பஞ்சாயத்து நடிகர் எனலாம். பல வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள், தொலைக் காட்சி தொடர்கள் என பலவற்றிலும் நடித்தவர். ஐஐடி காரக்பூரில் சிவில் இன் ஜினியரிங் படித்தவர்.

ரோஹித் பன்சால்

ரோஹித் பன்சால்

நீங்கள் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் பிரியராக இருந்தால் நிச்சயம் ஸ்னாப் டீலை அறிந்திருக்கலாம். அந்த ஸ்னாப் டீலின் COO ஆன ரோஹித் பன்சால், டெல்லி ஐஐடியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 successful IITians; 11 Indians to add pride to India

Eleven people, including Arvind Kejriwal, Raghuram Rajan and Sundar Pichai, studied at IITs and are now working in many leading positions to add pride to India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X