132 ஆன்லைன் பெட்டிங், கேமிங் செயலிகளை முடக்க ஆந்திர அரசு வேண்டுகோள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்த காரணத்தால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது மாநிலத்தில் பல லட்சம் மக்கள் ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட சேவைகளை அளிக்கும் சுமார் 132 வெப்சைட் மற்றும் ஆப்புகளைத் தடை செய்ய கோரி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த 132 செயலிகள் பட்டியலில் பல முன்னணி நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் மத்திய அரசு எந்த வகையிலான முடிவை எடுக்கும் என்பதை ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் மொத்த இந்தியாவும் எதிர்நோக்கி வருகிறது.

பேஸ்புக் வருவாய் 22% வளர்ச்சி.. ஆனா அமெரிக்கா, கனடாவில் மக்கள் 'டாடா'..!

132 செயலிகள்

132 செயலிகள்

ஆந்திர அரசு பேடிஎம் பர்ஸ்ட் கேம், MPL, Adda52 உட்பட ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட சேவைகளை வழங்கும் 132 இணையதளம் மற்றும் செயலிகளை அம்மாநிலத்தில் தடை செய்துள்ளது.

மேலும் அனைத்து இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் இந்த 132 செயலிகள் மற்றும் தளத்தைப் பயன்படுத்தாத வகையில் இணைப்பைத் துண்டிக்க (Access-ஐ Block) வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ரவி ஷங்கர் பிரசாத்

ரவி ஷங்கர் பிரசாத்

இதுகுறித்து டெலிகாம் சேவை துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் அவர்களுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய கடிதத்தில், இந்த ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட தளங்கள் இளைஞர்களைப் பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வை நகரமாக்குகிறது.

வீட்டில் இருந்தபடியே கம்பியூட்டர், ஸ்மார்ட்போன்களில் இத்தகைய தளத்தைப் பயன்படுத்துவதால் அதிகளவிலானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

டிரீம் 11
 

டிரீம் 11

ஆந்திர அரசு குறிப்பிட்டுள்ள 132 செயலி மற்றும் இணையதளத்தில் ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சரான் டிரீம் 11 இல்லை. இந்த நிறுவனமும் ஆன்லைன் கேமிங் சேவையும், வெற்றிபெறுவோருக்குக் கேஷ்பேக்-ம் கொடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆந்திராவின் 1974 கேமிங் சட்டத்தில் ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட-ஐ பயன்படுத்துவதும் சேவை அளிப்பதும் குற்றம் என 2020 சட்ட திருத்த மசோதா மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

மக்கள் நிலை

மக்கள் நிலை

சமீப காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆன்லைன் கேமிங்க், பெட்டிங், சூதாட்ட தளம் சார்ந்த வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் இதுகுறித்த விளம்பரங்களும் அதிகரித்து வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

132 online gaming, betting sites/APPs faced ban by AP Govt

132 online gaming, betting sites/APPs faced ban by AP Govt
Story first published: Friday, October 30, 2020, 20:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X