ரிலையன்ஸ் - சவுதி அராம்கோவின் $15 பில்லியன் மெகா டீல்.. நடப்பு ஆண்டில் முடியலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரப்பரப்பான அறிவிப்புகளுக்கு மத்தியில் முடிவடைந்த ரிலையன்ஸின் வருடாந்திர கூட்டத்தில் பற்பல அறிவிப்புகள் வெளியாகின.

 

இதில் பலரினையும் ஈர்த்த ஒரு திட்டம், ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ பற்றிய அறிவிப்பு தான்.

குடும்பம், குட்டி முக்கியம்.. ஜப்பான் அரசின் முடிவுக்கு மக்கள் ஏகபோக வரவேற்பு..!

ஏனெனில் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்த, முதல் வெளி நாட்டு போர்டு மெம்பர், உலகின் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அராம்கோவின் தலைவர் யாசி அல் ருமேயான் இணையவுள்ளது தான். உண்மையில் இது சர்வதேசமயமாக்கலின் ஒரு தொடக்கம் என்பது மறுக்க முடியாத உண்மையே.

சவுதி அராம்கோ - ரிலையன்ஸ் மெகா டீல்

சவுதி அராம்கோ - ரிலையன்ஸ் மெகா டீல்

இந்த நிலையில் ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு இடையேயான 15 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம், இந்த ஆண்டில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வணிகத்தில் 20% பங்குகளை, சவுதி அராம்கோவிற்கு விற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் தாமதம்

கொரோனா பாதிப்பால் தாமதம்

இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இது குறித்து கடந்த 2019ம் ஆண்டிலேயே பேச்சு வார்த்தை நடந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மிக மோசமாக சரிந்த எண்ணெய் விலை மற்றும் தேவை சரிவின் காரணமாக இந்த திட்டம் பற்றி அறிவிக்கப்படவில்லை.

கடுமையான சவால்கள்
 

கடுமையான சவால்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் தான் தனது வணிகளை தனித்தனியான பிரிவுகளாக மாற்றியமைத்தது. கடந்த ஆண்டில் இருந்து எண்ணெய் வணிகம் கடுமையான சவால்களை மேற்கொண்ட நிலையில், முழு திறனுடன் இயங்கி வருகின்றது என்றும் தனது உரையில் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

யார் இந்த யாசி அல் ருமேயான்

யார் இந்த யாசி அல் ருமேயான்

இதே யாசி அல் ருமேயான் பற்றிய அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில், சவுதி அராம்கோ தலைவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த அல் ருமேயன், வயது 51 என்றும் கூறினார். ருமேயான் உலகளவில் எரிசக்தி நிதி மற்றும் தொழில் நுட்பத்தில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர். அவரின் மிகப்பெரிய அனுபவங்களில் இருந்து நாங்கள் பெரிதும் பயனடைவோம் என்பது உறுதி என கூறியுள்ளார்.

 ஓய்வு பெற போகும் பி திரிவேதி

ஓய்வு பெற போகும் பி திரிவேதி

அதோடு ரிலையன்ஸின் யோகேந்திரா பி திரிவேதி 92 வயது, அவரின் ஓய்வு விருப்பத்தினையும் அறிவித்தார். இவர் 1992ம் ஆண்டில் திருபாய் அம்பானியின் வேண்டுகோளின் பேரில், அவர் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

$15 billion mega oil deal with Saudi Aramco to complete this year

Reliance latest updates.. $15 billion mega oil deal with Saudi aramco to complete this year
Story first published: Friday, June 25, 2021, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X