ஒரு ரூபாய் காசுக்கு 1.5 லட்சமா..?!! ஷாக்-ஆன நெட்டிசன்ஸ்..! உண்மை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போது பழைய பொருட்களுக்குச் சந்தையில் மிகப்பெரிய விலை உண்டு, உதாரணமாகப் பழைய ஓவியம், பழைய வைன் பாட்டில், பழைய பைக், பழைய கார், பிரபலங்கள் பயன்படுத்திப் பழைய உடை என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இந்தியாவில் தற்போது புதிய டிரெண்ட் ஆகி ஒன்று உருவாகியுள்ளது.

 

பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் விரும்பப்படுகிறது. குறிப்பாக ஈகாமர்ஸ் தளங்களில் பழைய இந்திய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்படுவது மட்டும் அல்லாமல் பலர் இதை ஆர்வத்துடன் வாங்கியும் வருகின்றனர்.

பழைய நாணயங்களைச் சேகரிப்பது பலருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும், சிலர் இதைப் பணக்காரர் ஆகும் வாய்ப்பாகப் பார்க்கின்றனர்.

 புதிய டிரெண்ட்

புதிய டிரெண்ட்

சில வாரங்களுக்கு முன்பு பழைய ஒரு ரூபாய் நோட்டு 45,000 ரூபாய்க்கு விற்பனை ஆனதில் பலரும் வியந்த நிலையில் தற்போது ஒரு பழைய ஒரு ரூபாய் நாணயம் தற்போது இணைய வர்த்தகச் சந்தையின் ஹாட் டாப்பிக் ஆக விளங்கி வருகிறது.

 1862ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நாணயம்

1862ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நாணயம்

பழைய பொருட்களை விற்பனை செய்யும் தளமான குவிக்கர்-ல் 1862ஆம் ஆண்டு வெளியான விக்டோரியா மகாராணி புகைப்படம் அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் சுமார் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக டிஎன்ஏ தெரிவித்துள்ளது.

 விக்டோரியா மகாராணி புகைப்படம்
 

விக்டோரியா மகாராணி புகைப்படம்

1862ஆம் ஆண்டு வெளியான காரணத்தால் மிகவும் அரிதான நாணயமாகக் கருதப்படும் இந்த நாணயம் விக்டோரியா மகாராணி புகைப்படம் மட்டும் அல்லாமல் முழுமையாக வெள்ளியால் உருவாக்கப்பட்ட காரணத்தால் இதன் மதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 குவிக்கர் தளம்

குவிக்கர் தளம்

உங்களிடமும் இதுபோன்ற அரிதான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இருந்தால் குவிக்கர் போன்ற தளத்தில் விற்பனை செய்யலாம். இதேபோல் நீங்கள் கேட்கும் விலைக்கு யாரேனும் பெற தயாராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயோ அல்லது அதற்கும் அதிகமாகவே கிடைக்கும்.

 ஜாக்பாட் அடிக்கும்

ஜாக்பாட் அடிக்கும்

ஆனால் நீங்கள் பதிவிட்டுள்ள நாணயத்திற்கு டிமாண்ட் இல்லாத பட்சத்தில் யாரும் வாங்காமலும் போகலாம். இதனால் அதிர்ஷ்டம் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். மேலும் ஒவ்வொரு நாணயத்திற்கும் இதுதான் விலை என்று எந்த நிர்ணயமும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 அட வெறும் 1350 ரூபாய்தானா

அட வெறும் 1350 ரூபாய்தானா

மேலும் இதே 1862ஆம் ஆண்டு வெளியான விக்டோரியா மகாராணி புகைப்படம் அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் வெறும் 1350 ரூபாய்க்குக் காயின் பஜார் என்னும் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. எனவே உண்மை அறிந்து வாங்குவது சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1862 Queen Victoria's 1 rupee coin sold for Rs 1.5 lakh in Quikr: is possible to get everyone

1862 Queen Victoria's 1 rupee coin sold for Rs 1.5 lakh in Quikr: is possible to get everyone
Story first published: Monday, May 24, 2021, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X