சீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கொரோனா மற்றும் அண்டை நாடுகளுடனான சீனாவின் செயல்பாடுகளுக்குப் பின் மிகப்பெரியதாக வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

வர்த்தகக் கட்டுப்பாடு, அதீத வரி, சீனர்கள் மீதான விசா கட்டுப்பாடு மற்றும் சீன நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடி தற்போது அடுத்தகட்டத்தை அடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகக் குழு அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வரும் 20 சீன நிறுவனங்களைச் சீன ராணுவத்திற்குச் சொந்தமானது அல்லது சீன ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது எனப் பட்டியலிட்டு, இது அமெரிக்காவின் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதன் பட்டியல் மூலம் அமெரிக்க அரசு சீன மீது நிதியியல் தடை விதிக்க அடித்தளம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. அமெரிக்கா பொருளாதாரத்திற்கு நல்லதல்ல..!

20 நிறுவனம்

20 நிறுவனம்

அமெரிக்க அரசு ஏற்கனவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பைக் காரணம் காட்டி அமெரிக்காவில் ஹூவாய் மற்றும் ஹைக்விஷன் நிறுவனத்தின் மீது வர்த்தகத் தடை விதித்துள்ளது. இதோடு சீன மொபைல் கம்யூனிகேஷன்ஸ் குரூப், சீனா டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப், ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் கார்ப் ஆப் சீனா ஆகிய நிறுவனங்களையும் முக்கிய நிறுவனமாகப் பட்டியலில் தேர்த்துள்ளது.

இப்படி 20 நிறுவனங்களைச் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது டிரம்ப் நிர்வாகக் குழு பட்டியலிட்டுள்ளது.

வர்த்தகத் தடை

வர்த்தகத் தடை

இந்தப் பட்டியலை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தயாரித்து டிரம்ப் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதுவரை பட்டியலிடப்பட்டுள்ள 20 நிறுவனங்கள் மீது எவ்விதமான அபராதம் விதிக்கப்படவில்லை, ஆனால் கூடிய விரைவில் இந்த நிறுவனங்கள் மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முடக்க உள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா - சீனா
 

அமெரிக்கா - சீனா

வர்த்தகப் போர்-ஐ தாண்டி சமீபத்தில் அமெரிக்கா சீனா இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இந்த 20 நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க அரசியல் கட்சிகள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை வறுப்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளது ரெயூட்டரஸ்.

எண்ணிக்கை அதிகரிக்கும்

எண்ணிக்கை அதிகரிக்கும்

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற நாட்டு நிறுவனங்கள் சீன மற்றும் சீன முதலீடுகள் தொடர்புடைய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதையும், முதலீடு செய்வதையும், கூட்டணி வைப்பதையும் தவிர்த்து வரும் நிலையில் இந்த 20 நிறுவன பட்டியல் தயாரிக்கப்பட்டு நிதியியல் அல்லது வர்த்தகத் தடைக்காக அடித்தளம் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியல் இத்துடன் நின்றுவிடாது கண்டிப்பாக நீண்டுகொண்டே இருக்கும் என அமெரிக்க வெள்ளை மாளிகை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

20 companies 'owned or controlled' by chinese military: Trump has new plan

Trump Adminstration listed out 20 Chinese companies 'owned or controlled' by chinese military that questions US national security
Story first published: Sunday, June 28, 2020, 7:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X