ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் திணறும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரத் தேக்கம் காரணமாக இந்திய சாப்ட்வேர் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது பெருமளவில் குறைந்து வருகிறது.

மேலும் புராஜக்ட்கள் இல்லாததால் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் உள்ள என்ஜினியர்களுக்கும் போதிய வேலைகள் இல்லை. கடந்த 6 மாதமாகவே இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக டெலிகாம், நிதித்துறை தொடர்பான சாப்ட்வேர் புராஜக்டுகள் சமீப காலமாக பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால் பெஞ்சில் இருக்கும் என்ஜினியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் நிறுவனத்தின் லாபத்தில் சரிவு ஏற்படலாம் என இன்போசிஸ் தனது ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.

இந் நிலையில் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் ஆகியவற்றில் புதிதாக பணிக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள் இந்த மாதத்தில் இருந்து பணியில் சேரவுள்ளதால், பெஞ்சில் இருப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT industry hit by shortage of projects from Europe and US | ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் திணறும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்!

Top Indian information technology companies will add to their already bloated bench strength in the coming quarters, as the $100-billion domestic industry battles a slowdown in projects from the West, its biggest revenue generator, and employees are left without work. According to industry watchers, shortage of projects from Europe and the US has forced software engineers to sit without projects for more than six months now, and utilisation rates could dip further with new campus recruits joining the workforce from this month.
Story first published: Wednesday, July 11, 2012, 15:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X