பெரும் வறட்சியை நோக்கி இந்தியா!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும் வறட்சியை நோக்கி இந்தியா!
டெல்லி: இன்று பெய்யாவிட்டாலும் நாளை பெய்துவிடும், இந்த வாரம் இல்லாவிட்டாலும் அடுத்த வாரத்தில் நிலைமை சரியாகிவிடும் என்று நம்பி வந்த மத்திய அரசுக்கு பெரும் ஏமாற்றம் தந்துவிட்டது பருவ மழை.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே வானம் பார்த்து வந்தது மத்திய அரசு. ஆனால், ஜூன் மாதமும் கடந்து ஜூலை மாதத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.

 

ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை சராசரியாகப் பெய்ய வேண்டிய மழையளவில் பாதியளவு கூட பெய்யவில்லை.

இதனால் 2011-12ம் ஆண்டில் நாடு உற்பத்தி செய்த 257 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியில் 70 சதவீதத்தைக் கூட இந்த ஆண்டு உற்பத்தி செய்ய முடியாது என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு விளை நிலங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.

அடுத்த ஒரு வாரமும் மழை பெய்யாவிட்டால் நிலைமை மிக மிக மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டால் அதை ஒட்டிய பிற துறைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் மேலும் மோசமாகும் சூழலும் உள்ளது.

இதையடுத்து வறட்சி நிலை உருவாகிவிட்டதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக சில முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

வறட்சி நிலைமை குறித்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகளும் மாநில அரசுகளுடன் வாரந்தோறும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வறட்சியை சமாளிக்கத் தேவையான திட்டங்களைத் தயாரிக்குமாறும் அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களில் கவனம் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Monsoon 22% deficient, PM worried | பெரும் வறட்சியை நோக்கி இந்தியா!

With inadequate rainfall adding to farmers’ woes in most parts of the country and creating a drought-like situation, Prime Minister Dr Manmohan Singh has directed all departments and ministries to coordinate with states to meet any eventuality by monitoring the monsoon situation on a weekly basis. As per the Meteorological Department, the monsoon has recorded a 22 percent deficiency this year. In simpler terms, the Meteorological Department says that the cumulative rainfall for the period from June 1 to July 15 is 22% less than the long period average (LPA).
Story first published: Tuesday, July 24, 2012, 10:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X