தமிழகம உள்ளிட்ட 4 மாநிலங்களில் சேவைகளை படிப்படியாகக் குறைக்க யூனிநார் முடிவு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சேவைகளை குறைக்க யூனிநார் முடிவு
மும்பை: தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தமது சேவையை படிப்படியாகக் குறைக்க தொலைத் தொடர்பு நிறுவனமான யூனிநார் செல்போன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

 

யூனிநார் நிறுவனமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தமது சேவையை படிப்படையாகக் குறைக்க உள்ளது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் கிழக்கு, உத்தரப்பிரதேசம் மேற்கு, பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா, மேற்குவங்கம், ஆந்திரப் பிரதேசம், மும்பை, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் சர்க்கிளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சேவை குறைக்கபப்டும் மாநிலங்களில் புதியதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சேவை குறைப்பு நடவடிக்கை குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலால் 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததாலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாததாலும் இத்தகைய ஒரு முடிவை யூனிநார் எடுத்திருக்கிறது.

மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள ஏதுவாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் யூனிநார் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது சேவை நிறுத்த முடிவு செய்துள்ள 4 மாநிலங்களிலும் ம் சுமார் 400 பணியாளர்களை நேரடியாக யூனிநார் நியமித்திருக்கிறது. இவர்களில் பலரை வீட்டுக்கு அனுப்பவும் சிலரை பணியிட மாற்றம் செய்யவும் இந்நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uninor to scale down operations in four active circles | தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சேவைகளை குறைக்க யூனிநார் முடிவு

Telecom service provider Uninor Tuesday said it is scaling down operations in four of its 13 active circles to ensure optimal fund utilization and to take part in the 2G auction from a stronger financial position.
Story first published: Wednesday, July 25, 2012, 8:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X