வட மாநிலங்கள் மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மீண்டும் மின்தடை ஏற்படும் என்று தெரிகிறது. அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் 3,000 மெகாவாட் திறன் கொண்ட 3 நீர் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த மின்தடை ஏற்படவிருக்கிறது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த மாதம் 30ம் தேதி பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. மறுநாள் அதாவது ஜூலை 31ம் தேதி வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு என பாதி இந்தியாவில் மொத்தமாக ஒரேசமயத்தில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மீண்டும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.

1,500 மெகாவாட் திறன் கொண்ட நாத்பா ஜாக்ரி, 1,000 மெகாவாட் திறன் கொண்ட கர்சம்-வாங்டூ மற்றும் 300 மெகாவாட் திறன் கொண்ட சமேரா II ஆகிய 3 நீர் மின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நீர் மின் நிலையங்களில் இருந்து வடக்கு மின் தொகுப்புக்கு மின்சாரம் செல்லும். நாட்டின் 28 சதவீத மக்களுக்கு வடக்கு மின் தொகுப்பில் இருந்து தான் மின் வினியோகம் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் மின் தொகுப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,

3 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மின் தொகுப்புக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் குறைவாகக் கிடைக்கிறது. மின் தேவை 33,000 மெகாவாட்டாக இருந்தபோது தான் வடக்கு மின் தொகுப்பில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

சட்லஜ் ஆற்றில் இருந்து வரும் நீரில் அதிக அளவு வண்டல் உள்ளதால் தான் நீர் மின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நாத்பா ஜாக்ரி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நள்ளிரவு மூடப்பட்ட இந்த நீர் மின் நிலையங்கள் நாளை காலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: power cut மின்தடை
English summary

North India may face another power outage | வட மாநிலங்கள் மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம்

Northern states, including Delhi, could face power cuts as three hydro-power plants that together supply about 3,000 MW of electricity to the region have been shut down.
Story first published: Tuesday, August 21, 2012, 10:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X